பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருஞான சம்பந்தர் அங்கே உள்ள அடியார்கள் இந்த ஞானக் கன்று எழுந்தருளுவதை அறிந்து வந்து எதிர்கொண்டு பணிந்து வரவேற்ருர்கள். சம்பந்தர் முத்துச் சிவிகையினின்றும் இறங்கி இறைவன் திருக்கோயில் முன் சென்ருர். உயர்ந்த கோபுரத்தைத் தரிசித்து வணங்கி உள்ளே புகுந்து திருக்கோயிலே வலம் வந்து பணிந்து இறைவனே வழிபட்டுத் திருப்பதிகம் பாடினர். முத்தமிழ் விரகர், கண் அருவி பொழிய இறைவனைப் போற்றி, உடன் வந்த தொண்டர்களுடன் அத்திருப் பதியில் சில காலம் தங்கினர். அப்போது அவருடைய தங்தையார் தாம் வேள்வி புரியும் காலம் அடுத்ததென்றும், அதற்குப் பொருள் வேண்டுமென்றும் புகன்ருர். அது கேட்ட சம்பந்தப் பிள்ளையார், 'நமக்கு என்றும் குறை விலாச் செல்வமாக இருப்பவன் இறைவன் அல்லவோ?” என்று கூறி, அவனைத் தொழும்பொருட்டுத் திருக்கோயில் சென்று வணங்கிப் பதிகம் பாடத் தொடங்கினர். கம்மை வந்து வேண்டுவார்க்கு ஈய நம்மிடம் ஒரு பொருளும் இல்லை. இறைவன் திருவடியன்றி வேறு ஒன்றும் அறியேம்' என்ற எண்ணத்தோடு அதைப் பாடினர். இடரினும் திள்ளினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்; க்டல் தனில் அமுதொடு கலத்தநஞ்சை மிடறினின் அடக்கிய வேதியனே! இதுவே சாமை ஆளுமா மீவதொன்றெமக் கில்கியேல் அதுவோஉன தின்னருள் ஆவடு துறையரனே! என்று தொடங்கிப் பதிகம் பாடினவுடன், இறைவன் அருளாணேயால் ஒரு பூதம் ஆயிரம் பொன் உள்ள கிழி ஒன்றை ஒரு பீடத்தில் வைத்து, "இது எடுக்க எடுக்கக் குறையாக் கிழி; இறைவர் அருளியது” என்று சொல்லி மறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/44&oldid=783996" இலிருந்து மீள்விக்கப்பட்டது