பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழில் அடங்கா இசை 39 இறைவனேப் பணிந்து அக்கிழியை எடுத்துத் தம் தங்தையாரிடம் அளித்து, "சிவபெருமானே முதல்வராக வைத்துத் தாங்கள் வேள்வி புரியவும், சீகாழியில் உள்ள வேதியர் அனைவரும் செய்யவும் இந்தக் கிழி உதவும்" என்று கூறினர் சம்பந்தர். தங்தையார் அதைப் பெற்றுக் கொண்டு சீகாழியை அடைந்தார். ஞானம்பந்தப் பிள்ளையார் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருத்தருமபுரத்துக்கு வந்தார். அவருடன் இருந்து அவருடைய திருப்பதிகங்களே யாழில் இசைத்துப் பாடி வந்த திருநீலகண்ட யாழ்ப்பான நாயனருடைய தாயார் பிறந்த இடம் அது. அங்கே யாழ்ப்பாணருடைய சுற்றத்தார் பலரும் வந்து பிள்ளே யாரை வணங்கினர்கள். அப்போது திருநீலகண்ட யாழ்ப் பாணர், “ஞானசம்பந்தப் பெருமான் தாம் பாடியருளும் திருப்பதிகங்களே யாழில் அமைத்து வாசிக்கும் பெரும் பேற்றை எளியேனுக்கு அருளியிருக்கிருர்’ என்று அவர் களிடம் சொன்னர். அவர்கள் அதுகேட்டு, “நீங்கள் அப்படி வாசிப்பதளுலேதான் அந்தப் பதிகங்கள் எங்கும் பரவிப் புகழ் பெறுகின்றன' என்ருர்கள். அதைக் கேட்ட யாழ்ப்பாணர் உளம் கடுங்கினர். "என்ன அறியாமை இது!’ என்று வருந்தினர். உடனே ஞானசம்பந்தரை வணங்கி, ‘தேவரீர் யாழில் இசைக்க முடியாத வகையில் திருப்பதிகம் பாடியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அப் பெருமான் இறைவன் திருவருளே வழுத்தி, "மாதர் மடப்பிடி’ என்று தொடங்கும் பதிகத்தை அருளிச்செய்தார். அதனை முற்றும் பாடி முடித்த பிறகு, யாழ்ப்பாணர் தம் யாழை எடுத்து அந்தப் பதிகத்தை அக்கருவியில் அமைத்துப் பாட முயன்ருர். அதன் காம்புக்கட்டில் அமையாத வகையில் பதிகம் இருந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/45&oldid=783998" இலிருந்து மீள்விக்கப்பட்டது