பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. திருஞான சம்பந்தர். யால் அவரால் அதை வாசிக்க முடியவில்லை. என்ன முயன்றும் பாசுரத்தை யாழிசையில் பொருத்த முடியாமல் கலங்கிய யாழ்ப்பாணர் யாழைக் கீழே வைத்துவிட்டுச் சம்பந்தர் திருத்தாளில் வீழ்ந்தார். எழுந்து, “ இப் பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்திசையை யாழில் பொருத்திப் பாடுவேன் என்று நான் செருக்குடன் கூறிய தற்குக் காரணம், இக்கருவியை கான் தொட்டதுதான். இந்த யாழினுல்தான் எனக்கு இத்தகைய தருக்கு உண்டாயிற்று. இனி இதனை உடைத்து விடுவேன்' என்று சொல்லி யாழை உடைக்க ஓங்கினர். பிள்ளையார் அதைத் தடுத்து, "இதை என்னிடம் தாரும்" என்று வாங்கிக்கொண்டு, 'இறைவன் திருவருட் பெருமையை இதனுள் அடக்கிவிடலாம் என்று எண்ண முடியுமா? இந்தக் கருவியின் அளவுக்கு எவை அடங்குமோ,அவற்றை வழக்கம்போல் வாசித்து வருவீராக” என்று கூறினர். பாணர் அவரைத் தொழுது யாழை வாங்கிக்கொண்டார். யாழ்ப்பாணருடைய சுற்றத்தார் இந்த நிகழ்ச்சியைக் கண்டு, தம் பேதைமையை உணர்ந்து இரங்கினர். மீட்டும் சிவத் தலங்களே வழிபடும் கருத்தோடு புறப்பட்ட சம்பக்தர் திருச்சாத்தமங்கை வந்து அங்கே வாழ்ந்த திருலோக்க காயைைரக் கண்டு, அவர் வழிபட்டு உபசரிக்க, அங்கே தங்கி இறைவனைத் தரிசித்தார். பிறகு வேறு தலங்களைப் பணிந்து சென்று திருச்செங்காட்டங் குடியை அனேந்தார். அங்கே இருந்த சிறுத்தொண்டர் அவர் வரவை அறிந்து ஒடிச் சென்று வரவேற்று அழைத்துச் சென்ருர். அத்தலத்திலுள்ள கோயிலுக்குக் கணபதிச்சரம் என்று பெயர். சம்பந்தரும் சிறுத் தொண்டரும் பிற அடியார்களும் கேரே திருக்கோயிலுக் குச் சென்ருர்கள். அமைச்சராக இருந்து புகழ்பெற்றவர் சிறுத்தொண்டர். அவர் அடியாராக கின்று தொழும் தகைமையைச் சுட்டித் திருப்பதிகம் பாடினர் பிள்ளையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/46&oldid=784000" இலிருந்து மீள்விக்கப்பட்டது