பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவுக்கரசருடன் யாத்திரை 41 செடிநுகரும் சமணர்களும் சிவரத்த சாக்கியரும் படிது கரா தயருழப்பார்க் கருளாத பண்பிளுன் (டாகக் பொடிது கரும் சிறுத்தொண்டர்க்கருள் செய்யும் பொருட் கடிநகராய் விற்றிருந்தான் கணபதிச் சரத்தானே.” என்ற திருப்பாட்டில் அச் செய்தி வருகிறது. இறைவனைத் தரிசித்து இன்புற்றுப் பின்பு சிறுத்தொண்டருடைய திருமனையிற் சென்று சில நாள் தங்கினர் சம்பந்தர். காவுக்கரசருடன் யாத்திரை திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டருடைய உபசாரத்தைப் பெற்று ஞானசம்பந்தர் தங்கியிருக்கையில், அருகில் உள்ள திருமருகல் என்ற தலத்துக்குப் போய் இறைவனைத் தரிசித்து வரவேண்டுமென்று புறப்பட்டார். அங்கே சென்று இறைவனே வழிபட்டுப் பதிகம் பாடிச் சில நாட்கள் தங்கியிருந்தார். வைப்பூர் என்ற ஊரில் தாமன் என்ற வணிகன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவனுக்கு ஏழு பெண்கள் பிறந்தனர். அவனுடைய மருமகன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தன் மூத்த பெண்ணே மணம் செய்து கொடுப் பதாகத் தாமன் சொன்னன். ஆனால், சொன்னபடி நடவாமல் பொருளாசை Զ5IrքrՅԾԾr ԼոII Յ5 அயலான் ஒருவனுக்கு அவளே மணம் செய்து கொடுத்துவிட்டான். பிறகு இரண்டாம் பெண்ணேத் தருவதாகச் சொல்லி ஆசை காட்டி அவளேயும் அயலானுக்குக் கொடுத்து விட்டான். இப்படியே ஆறு பெண்களே அந்த வணிகன் அயலார்களுக்கே மணம் செய்து கொடுத்தான். இது கண்ட மருமகன் மிகவும் மனம் வாடியிருந்தான். ஏழாம் பெண் தன் தங்தை செய்த வஞ்சகத்தையும் தன் அத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/47&oldid=784002" இலிருந்து மீள்விக்கப்பட்டது