பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 திருஞான சம்பந்தர் மகன் படும் துயரத்தையும் கண்டு தானே அவனே மணந்து கொள்ளத் துணிந்தாள். தன்னைப் பெற்றவர்களுக்குத் தெரியாமல் அந்த மைந்தைேடு புறப்பட்டு வந்துவிட்டாள். இருவரும் எங்கேனும் போய்த் திருமணம் செய்துகொள்ள எண்ணி வந்தவர்கள், இடையே திருமருகலில் ஒரு மடத்தில் தங்கினர்கள். அன்று ஒரு பாம்பு அந்த வணிக மைந்தனேக் கடிக்க, நஞ்சேறி அவன் உயிர்விடும் கிலையை அடைந்தான். அதுகண்டு அவனுடன் வந்த கன்னி, கிலே தளர்ந்து சோர்ந்தாள். திருமணம் ஆகாதவளாதலின் அவனைத் திண்டாமல் அருகே வீழ்ந்து அரற்றலாள்ை. யாரும் அவளுக்கு ஆறுதல் கூறுவார் இல்லை. 'என் தாய் தங்தையரைப் பிரிந்து உன்னேயே பற்றுக்கோடாக எண்ணி உடன் வந்தேன். பாம்பு கடிக்க, என்னே விட்டுச் சென்ருயே! யான் என் செய்வேன்! என் இடர் தீர்ப்பார் யாரும் இல்லையே! யானும் இனி உயிர் வாழப் போவதில்லை”என்று அரற்றியவள்,அருகில் உள்ள கோயில் கண்ணில் படவே, அந்தத் திசையை கோக்கித் தொழுது சிவபிரானேக் குறித்து ஓலமிடத் தொடங்கிள்ை. "சின் அடி அடைந்து பணிந்த இமையவர் கூட்டம் உயிர் பிழைக்க வேண்டி, அலேகடலில் எழுந்த கஞ்சை உண்ட அமுதம் போன்ற பெருமானே! கரிய விடத்தை யுடைய அரவை அணிந்த கிமலனே! வெங்து பொடியான காமனே அவனுடைய மனேவியான இரதி வேண்ட உயிர் தந்து எழுப்பிய புண்ணியனே திருமருகற். பெருமானே! தோன் காக்க வேண்டும்" என்று அரற்றினுள்; பின்னும், 'சிறு மறையோனகிய மார்க் கண்டேயனேப் பற்ற வந்த காலனே உதைத்து உருட்டிய திருவடியை உடையவனே! இந்த கஞ்சின் வேகம் நீங்கும் படியும், அடியேன் இடுக்கணென்னும் குழிகின்று ஏறும் படியும் அருள வேண்டும்” என்று புலம்பினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/48&oldid=784004" இலிருந்து மீள்விக்கப்பட்டது