பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவுக்கரசருடன் யாத்திரை 43. அப்போது திருக்கோயிலைத் தரிசிக்கும்பொருட்டு வந்துகொண்டிருந்த சம்பந்தப்பெருமான் திருச்செவியில் அந்தப் பெண் அரற்றும் ஒசை விழுந்தது. உடனே அவள் இருக்குமிடம் சென்று அந்தப் பெண்ணைக் கண்டு, "மீ அஞ்சாதே; உங்கள் வரலாறு என்ன? சொல்” என்று கேட்டார். அவள் யாவற்றையும் எடுத்துரைத்தாள். அதுகேட்டு மனம் இரங்கிய சீகாழிப் பெருமான் வணிகனுடைய விடம் திருமாறு ஒரு திருப்பதிகம் பாடத் தொடங்கினர். சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகள் உடையாய் தகுமோ இவளுள் மெலிவே என்பது அப்பதிகத்தின் முதல் திருப்பாட்டு, பதிகம் முடிந்தவுடன் அரவு திண்டிய மைந்தன் விடம் நீங்கி எழுந்து சம்பந்தரைப் பணிந்தான். அவனுடைய காதலியும் அவரைப் பணிய, அவ்விருவரையும் திருமணம் புரிந்துகொண்டு நீடுழி வாழ்கவென்று ஆசி கூறி அனுப்பினர். பிறகு சிறுத்தொண்டர் வேண்டுகோளின் மேல் சம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று தங்கினர். பின்பு திருப்புகலூர் அடைந்து அங்குள்ளோர் எதிர்கொண்டு போற்ற, முருககாயனர் மடத்தில் சென்று தங்கினர். அங்கே தங்கியிருந்தபோது, திருநாவுக்கரசர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வணங்கிப் பாடித் தொண்டர்குழாத்துடன் திருப்புகலூருக்கு வந்து கொண்டிருந்தார். அதனை அறிந்த ஞானப்பிள்ளையார் அன்பு மிக ஊற ஊருக்கு வெளியிலே அப்பரை எதிர் கொண்டழைக்கச் சென்ருர். அப்பர் வந்தனைய, இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி கலத்தை வினவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/49&oldid=784006" இலிருந்து மீள்விக்கப்பட்டது