பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருஞான சம்பந்தர் கொண்டனர். 'திருவாரூரில் தரிசனம் எப்படி? " என்று சம்பந்தர் கேட்க, அப்பர் ஒரு திருப்பதிகத்தால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னர். அதுகேட்ட சம்பந்தருக்குத் திருவாரூர் சென்று வழிபடவேண்டும் என்ற விருப்பம் உண் டாக, "தாங்கள் திருப்புகலூரில் தங்கியிருக்க வேண்டும்; நான் திருவாரூர் சென்று தரிசித்து மீண்டும் இங்கே வந்து சேர்ந்துகொள்வேன்” என்று விடைபெற்று அங்ககரை நோக்கிப் புறப்பட்டார். இடையில் உள்ள சில தலங்களை வழிபட்டு ஆராக் காதல் மீதுார ஆளுரை அடைந்தார், சம்பந்தர். அங்கே நகர மக்கள் ஊரை அலங்கரித்து வரவேற்க, நகருள் சென்று திருவாரூர் எம்பெருமானே வழிபட்டு ஏத்தினர். அங்கே சில நாட்கள் தங்கிப் பல பதிகங்கள் பாடி இன்புற்ருர், பின்பு அங்கிருந்து திருப்புகலூர் வந்து திருநாவுக்கர சருடன் சில நாள் அங்கே தங்கினர். அப்பால் அவ்விருவரும் ஒருங்கே சிவத்தல வழிபாடு செய்யப் புறப்பட்டார்கள். ஞானசம்பந்தர் திருகாவுக்கர சடருன் கடந்து வர, அவருடைய முத்துச்சிவிகை பின்னே வந்தது. அது கண்ட காவுக்கரசர், "சிவபெருமான் தாங்கள் கடக்கக்கூடாது என்ற திருவுள்ளத்தினல் அருளிய இந்தச் சிவிகை தனியே வருவது முறையன்று. தாங்கள் இதன் மேல் ஊர்ந்து வரவேண்டும்” என்று வேண்டினர். காவுக்கரசர் கடந்து செல்ல, தாம் மட்டும் சிவிகையில் ஏறிப் போவதைச் சம்பந்தர் விரும்பவில்லை. ஆயினும் காவுக்கரசர் கூறியதையும் தட்டமுடியவில்லை. ‘இறைவன் திருவுள்ளம் அதுவானல் தாங்கள் முன்னே எழுர் தருளுங்கள். தாங்கள் எங்கே போகிறீர்களோ, அங்கே பின்பு வந்து சேர்கிறேன்” என்று அவர் சொல்ல, அப்பரும் அதற்கு இசைந்தார். அதுமுதல் அப்பர் முதலிலே சென்று ஒரு தலத்தை அடைவதும், சம்பந்தர் பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/50&oldid=784011" இலிருந்து மீள்விக்கப்பட்டது