பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலையும் மறைக்காடும் 45 சிவிகையில் அவ்விடத்தை அடைவதுமாகவே யாத்திரை செய்யலாயினர். திருவம்பர் திருக்கடவூர் முதலிய பல தலங்களுக்கு இந்த முறையில் இருவரும் சென்று தரிசித்துத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர். விழிமிழலையும் மறைக்காடும் பல தலங்களேத் திருநாவுக்கரசரும் திருஞான சம்பக் தரும் தரிசித்துக்கொண்டு திருவிழிமிழலே சென்று அடைக் தனர். திருஞான சம்பந்தர் அந்தத் தலத்தில் எழுந்தருளி யிருப்பதை அறிந்த சீகாழி அந்தணர்கள் அவ்வூர் வந்து சம்பந்தரைப் பணிந்து தம் ஊருக்கு எழுந்தருள வேண்டு மென்று வேண்டிக்கொண்டனர். திருவிழிமிழலைப் பெரு மானிடம் விடை பெற்றுப் புறப்படலாம் என்று சம்பந்தர் கூறினர். அன்று இரவு அவர் கனவில் சிகாழிப் பெருமான் தோன்றி, "இந்தத் தலத்தில் உள்ள விண்ணிழி விமானக் கோயிலில் நாளே நம்முடைய காட்சியைக் காட்டுகின்ருேம்' என்று அருளினன். மறுநாள் ஞானசம்பந்தப்பிள்ளையார் திருவிழிமிழலைத் திருக்கோயிலுக்குட் சென்று தரிசித்தபோது அங்கே சீகாழிப் பெருமானுடைய அழகுக் காட்சியைக் கண்டு பணிந்து இன்புற்ருர். “மைம்மரு பூங்குழல்’ என்ற திருப்பதிகம் பாடி, "சீகாழியில் எழுந்தருளி யிருக்கும் பெருமானகிய தேவரீர் இந்த விண்ணிழி கோயிலே விரும் பியது என்னே' என்று அப்பதிகப் பாடல்களில் விளுவை அமைத்தார். அப்பால் சீகாழியிலிருந்து வந்திருந்த மறை யோர்களைப் பார்த்து, 'பல சிவத்தலங்களையும் தரிசிக்கப் புறப்பட்ட அடியேன் பயணம் தடையுறக் கூடாது என்ற பேரருளால் சீகாழிப் பெருமான் இங்கேயே காட்சி வழங் கினன். ஆதலின் நீங்கள் சீகாழியை அடைவீர்களாக" என்று சொல்ல, அவர்கள் விடைபெற்றுச் சென்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/51&oldid=784013" இலிருந்து மீள்விக்கப்பட்டது