பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருஞான சம்பந்தர் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் அங்கே காள்தோறும் திருவிழிமிழலை எம்பெருமானத் தரிசித்துப் பதிகங்களைப் பாடித் தங்கியிருந்தனர். அப்போது காடு எங்கும் மழை பெய்யாமல் பஞ்சம் உண்டாயிற்று. ஆறுகள் வறண்டன. ர்ே இன்மையால் வயல்கள் விளைய வில்லை. அதனல் மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கா மல் வாடினர். அது கண்டு சம்பந்தப்பிள்ளையாரும் காவுக்கரசரும் மிக்க வருத்தத்தோடு இருந்தனர். ஒரு நாள் இரவில் அவ்விருவருடைய கனவிலும் இறைவன் தோன்றி, "இந்தப் பஞ்சத்தால் உங்களுக்கு ஒரு தீங்கும் உண்டாகாது. உங்களுடன் உள்ள அடியார்களுக்கு உணவு கிடைக்க ஒரு வழி செய்வோம். காள்தோறும் திருக்கோயிற் பீடத்தில் கிழக்கிலும் மேற் கிலும் ஒவ்வொரு காசு வைப்போம். அவற்றைக் கொண்டு அடியார்களுக்கு உணவு வழங்கத் திட்டம் செய்யுங்கள்” என்று அருளினன். உடனே துயிலுணர்ந்த சம்பக்தர் இறைவன் திருவருளே எண்ணி வியந்தார். மறுநாள் அப்பரும் சம்பந்தரும் திருக்கோயிலுக் குள்ளே சென்று வணங்கியபோது பீடத்தின் கீழ்ப்பக்கத் திலும் மேற்பக்கத்திலும் ஒவ்வொரு பொற்காசு இருந்தது. கிழக்குப் பக்கத்துக் காசைச் சம்பந்தரும் மற்றையதை அப்பரும் தொழுது எடுத்து, அவற்றைக் கொண்டு அரிசி முதலிய பண்டங்களே வாங்கி, தம் தம் மடத்தில் தம் முடன் இருந்த அடியார்களுக்குக் குறைவின்றி உணவூட்டி வாதாாகள. அப்போது திருநாவுக்கரசர் மடத்தில் உரிய காலத்தே யாவரும் உணவு பெற்று வந்தனர். ஆல்ை சம்பந்தர் திரு மடத்தில் தாமதித்தே உணவு அளித்தார்கள். இதனை உணர்ந்த பிள்ளையார், "என் கம் மடத்தில் உணவு வழங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/52&oldid=784015" இலிருந்து மீள்விக்கப்பட்டது