பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலையும் மறைக்காடும் ക്റ്റ് இவ்வளவு நேரமாகிறது?’ என்று கேட்டார். அடியார்கள், “நம்முடைய காசைக் கொண்டு போய்க் கடையில் காட்டினல், வாசியுள்ள காசு என்று கூறி வட்டம் கேட் கிருர்கள். அதல்ை பண்டங்கள் வாங்கத் தாமதம் ஏற்படு கிறது. திருநாவுக்கரசர் பெறும் காசைக் கொடுத்தவுடனே பண்டங்களைக் கொடுத்து விடுகிருர்கள்" என்ருர்கள். அப்பர் உழைத்துப் பெறுவதாதலின் வாசி தீர்ந்த காசைப் பெறுகிருர் போலும் அவர் தொண்டு செய்து படும் பாட்டால் பெறும் காசை நான் பாடும் பாட்டால் பெறுவேன்' என்று எண்ணி, வாசி திரவே காசு கல்குவீர்” என்ற திருப்பதிகத்தைப் பாடினர். அதுமுதல் அவருக்கும் வாசி தீர்ந்த நல்ல காசு கிடைக்கலாயிற்று. அதை வாங்கிய வுடனே கடைக்காரர்கள் பண்டங்களேத் தந்தார்கள். அதனல் திருஞான சம்பந்தர் மடத்திலும் சரியான வேளை யில் யாவரும் உணவு உண்ணலாயினர். சில காளில் எங்கும் மழை பெய்து பஞ்சம் கிர்ந்தது. மக்களுக்கு வேண்டிய உணவுப் பண்டங்கள் கிடைத்தன. திருவிழிமிழலையில் இருந்த அவ்விரு நாயன்மாரும் அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டு வேறு பல திருத்தலங்களேத் தரிசித்துக்கொண்டு திருமறைக் காடாகிய வேதாரணி யத்தை அடைந்தனர். திருநாவுக்கரசர் அப்பதிக்கு முதலில் செல்ல, அவரை வரவேற்றனர் அங்ககரத்து மக்கள். பின்னே சம்பந்தப் பெருமான் எழுந்தருள்கின்ருரென்பதை அப்பர் சுவாமிகள் மூலமாக உணர்ந்து அவர்கள் அப் பெருமானே எதிர்பார்த்துக்கொண் டிருந்தனர். பிள்ளையார் வந்தபோது மிகச் சிறப்பாக வரவேற்றுப் பணிந்தார்கள். சம்பந்தரும் திருநாவுக்கரசரும் மறைக் காட்டுறையும் பெருமானைத் தரிசிக்கத் திருக்கோயிலுக்குச் சென்ருர்கள். அங்கே கோயிலின்முன் உள்ள திருவாயில் அடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/53&oldid=784017" இலிருந்து மீள்விக்கப்பட்டது