பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருஞான சம்பந்தர் கிடக்க, அருகே வேறு ஒரு வாயிலே உண்டாக்கி, அதன் வழியே அடியார்கள் சென்று வழிபட்டு வந்தார்கள். திருஞான சம்பந்தர் அதன் காரணத்தைக் கேட்க, "ஒரு காலத்தில் இங்கே மறைகள் வந்து இறைவனைப் பூசித்து இந்த வாயிலே அடைத்துச் சென்றுவிட்டன. அது முதல் இப்படியே உள்ளது” என்று அடியார்கள் கூறினர். அது கேட்ட பிள்ளையார் அப்பரை நோக்கி, "அப்பரே, வேதவனப் பெருமானே இந்தக் கிழக்குத் திரு வாயிலின் வழியே புகுந்து நாம் வணங்கவேண்டும். நீங்கள் இந்த வாயிலின் திருக்காப்பு நீங்குமாறு தண்டமிழ்ப் பதிகம் பாடி அருள வேண்டும்" என்று வேண்டினர். அது கேட்ட அப்பர், 'உங்கள் திருவுள்ளம் இது வானுல் அப்படியே செய்கிறேன்' என்று கூறி, ஒரு திருப் பதிகம் பாடலானர். பத்துப் பாடல்களைப் பாடியும் திருக் கதவம் திறக்கவில்லை. அதல்ை வருந்திய அப்பர் அடுத்த பாட்டில் அவ்வருத்தத்தைக் குறிப்பித்துப் பாட, உடனே திருக்கதவம் திறந்துகொண்டது. உடனே யாவரும் அவ்வாயிலின் வழியே புகுந்து இறைவனே வழிபட்டார்கள். அப்பர் சுவாமிகள் உள்ளம் உருகி இறைவனேப் பணிந்து பதிகம் பாடினர். யாவரும் தரிசனம் செய்துகொண்டு புறம்பே வந்தபோது காவுக்கரசர் சம்பந்தப் பெருமானே நோக்கி, "இந்தத் திருக்கதவம் மீட்டும் அடைக்கவும் திறக்கவும் எளிதா யிருக்க வேண்டும். ஆதலின் இப்போது அடைக்க நீங்கள் பாடுங்கள்' என்று கூற, அப்படியே சம்பந்தர், "சதுரம்' என்று தொடங்கி ஒரு திருப்பதிகத்தைப் பாடினர். உடனே அக்கதவம் அடைபட்டது. உடன் இருந்த அடியார்கள் இறைவன் திருவருளே எண்ணி ஆரவாரம் செய்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/54&oldid=784018" இலிருந்து மீள்விக்கப்பட்டது