பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்குப் புறப்பாடு - 49 அதுமுதல் அந்தத் திருவாயில் அடைக்கவும் திறக் கவும் எளிதாக அமைந்தது. வேதங்கள் அடைத்துச் சென்ற வாயிலைத் திறக்கவும் மூடவும் செய்த திருப்பதிகங் களே யாவரும் ஒதினர்; இவையும் வேதத்துக்கு விகராவன என்று பாராட்டினர். மதுரைக்குப் புறப்பாடு திருமறைக்காட்டில் சம்பந்தப் பெருமானும் நாவுக்கர சரும் தங்கியிருந்தபோது, இறைவன் நாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வா என்று பணிக்க, அவர் அந்தத் திருப்பதிக்குச் சென்ருர், அதனே அறிந்த ஞானசம்பக் தரும் அங்கே சென்று இறைவனை வணங்கினர். பின்பு இருவரும் மீட்டும் திருமறைக்காட்டுக்கு வந்து, காள் தோறும் இறைவனே வணங்கித் திருப்பதிகம் பாடினர்கள். சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள். அக்காலத்தில் பாண்டி நாட்டில் நெடுமாறன் என்ற கூன்.பாண்டியன் அரசாண்டு வந்தான். அவனுடைய மாதேவி, சோழன் மகளாகிய மங்கையர்க்கரசியார். அவனுக்கு முதல் மந்திரியாக இருந்தவர் குலச்சிறையார். சமண சமயத்தினர் அரசனைத் தம் வசப்படுத்தி எங்கும் தம்முடைய சமயத்தைப் பரப்பத் தொடங்கினர்கள்.' அரசனுடைய துணைவலிமையால் அவர்களுடைய முயற்சி கள் வெற்றி அடைந்தன. சைவர்கள் பலர் சைனர்களா யினர். வேதநெறியும் சைவ நெறியும் மங்கின. சைவம் சிறந்து வளர்ந்த அந்த காட்டில் இப்போது அது ஒளிந்து வாழலாயிற்று. மன்னவன் சமணனைலும் அவனுடைய மனேவியாகிய மங்கையர்க்கரசியாரும் அமைச்சராகிய குலச்சிறையாரும் ட்டும் சைவ நெறி பிறழாது வாழ்ந்து வந்தனர். இறைவ தி. ஞா. ச.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/55&oldid=784020" இலிருந்து மீள்விக்கப்பட்டது