பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 . திருஞான சம்பந்தர் ணுடைய திருவருளால் பாண்டிகாடு பழையபடி சைவ நெறியில் மேலோங்கி கிற்கும் காள் என்று வரும் என்று ஏங்கியிருந்தார்கள். அவர்கள் காதில் திருஞான சம்பந்தருடைய பெரு மையும், அவர் செய்து வரும் அற்புதங்களும் விழுந்தன. இப்போது திருமறைக்காட்டில் வந்து தங்கியிருக்கும் செய்தியையும் அறிந்தார்கள். உடனே சிலரை, "மறைக் காடு சென்று சம்பந்தப் பெருமானே வணங்கிவிட்டு வாருங்கள்" என்று அனுப்பினர்கள். - அவர்கள் திருமறைக்காட்டுக்கு வந்து பிள்ளேயார் எழுந்தருளியிருந்த திருமடத்தை அடைந்து, தாம் வங் திருக்கும் செய்தியை வாயில் காவலரிடம் சொன்னர்கள். அவர்கள் உள்ளே புக்கு, "வளவர்கோன் மகளாரும் தென்னவன் தேவியாரு மாகிய மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் என்னும் இருவரும் ஏவப் பொற்கழல் பணிய வந்தோம் என்று சிலர் புறத்தே வந்து சொன்னர்கள்" என்று விண்ணப்பம் செய்துகொண் டார்கள். புகலி காவலர் அதைக் கேட்டு அருள் கூர்ந்து, "அவர்களை இங்கே அழையுங்கள்' என்று பணித்தார். அப்பெருமான் பணித்தபடியே அவர்கள் மதுரையிலிருந்து வந்தவர்களே அழைத்துவர, வந்தவர்கள் பெருமானே வணங்கி எழுந்தார்கள். மங்கையர்க்கரசியார், குலச்சிறை யார் என்னும் இருவருடைய கலத்தையும் பிள்ளையார் வினவ, சொல்லிவிட்டு மேலே சொல்லலானர்கள்; "பாண்டி காடு சமணர்களுடைய செயல்களால் கட்டழிந்து இழிந்துவிட்டது; மன்னனும் அவர்களுடைய மாயத்தில் அழுந்தினன். இந்த கிலேயைத் தேவரீரிடம் விண்ணப்பித்துக் கொள்ளும்படி அரசியாரும் அமைச்ச ரும் பணித்தனர்" என்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/56&oldid=784022" இலிருந்து மீள்விக்கப்பட்டது