பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்குப் புறப்பாடு 5霊 அதுகேட்டு அருகில் இருந்த சிவனடியார்கள்,தேவரீர் அக்காடு பழையபடி வேதநெறியில் செல்வது ஆகவும் வேக் தன் வெண்ணிறு இடுபவன் ஆகவும் செய்யத் திருவுளம் கொள்ளவேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்கள். சீகாழிப் பிள்ளையார் முகமலர்ந்து அவர்களுக்கு அருள் செய்து, பிறகு திருநாவுக்கரசருடன் திருக்கோயி லுக்குச் சென்ருர். இறைவனை வணங்கி மீண்டு, பெரிய திருக்கோபுர கிலேயில் இருந்தபடியே அப்பரை நோக்கி, அரசியாரும் அமைச்சரும் சொல்லியனுப்பிய வார்த்தை யைக் கூறினர்; அங்கே சென்று இறைவன் திருவருளால் ஏதாவது செய்ய வேண்டும்; போவதாகத் தீர்மானம் செய்துவிட்டேன்' என்ருர், அதுகேட்ட திருகாவுக்கரசர், "குழந்தைப் பெருமானே, சமணர்கள் செய்யும் வஞ்சனேகளுக்கு எல்லேயே இல்லை. இப்போது கிரக கிலேயும் சரியாக இல்லை. ஆதலின் போவது தக்கதன்று' என்று கூறினர். உடனே சம்பந்தர், "காம் எம்பெருமான் திருவடிகளேயே ஏத்தி வாழும்போது எந்த விதமான தீங்கும் அணையாது” என்று சொல்லித் தம் கருத்தை ஒரு திருப்பதிகம் பாடி உணர்த்தினர். வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணே தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டும் உடனே ஆசறும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவிர்க்கு மிகவே. (மூங்கிலின் அழகைப் பெற்ற தோளேயுடைய உமாதேவி யாரை ஒரு பாகத்திலே உடையவன், ஆலகால நஞ்சை உண்ட கழுத்தை உடையவனுகிய சிவபெருமான், அழுக்கற்ற சந்திரனேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/57&oldid=784023" இலிருந்து மீள்விக்கப்பட்டது