பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 திருஞான சம்பந்தர் கங்கையையும் தன் திருமுடிமேல் அணிந்துகொண்டு அடியே ஆணுடைய உள்ளத்தில் புகுந்து பாதுகாக்கும் அச்செயலால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு கேதுக் களாகிய பாம்பு இரண்டு ஆகிய யாவும் ஒருங்கே எனக்குத் தீங்கு அற்று கலம் தரும்; அவை அடியார்களுக்கு மிகவும் நன்மையையே தரும்.) இந்த முதற்பாட்டையுடைய அப் பதிகத்துக்குக் கோளறு பதிகம் என்ற திருநாமம் வழங்குகிறது. இதனைக் கேட்ட அப்பர், சம்பக்தர் மதுரை செல்வ தற்கு இசைக்ததோடு தாமும் முன்னல் செல்லப் புறப் பட்டார். அப்போது சம்பந்தர், நீங்கள் இந்தச் சோழ காட்டில் எழுந்தருளியிருங்கள்" என்று கூறி, மீட்டும் வேதவனத்து இறைவரை வணங்கித் திருகாவுக்கரசரிடம் விடை கொண்டு தம்முடைய முத்துப் பல்லக்கில் ஏறிப் புறப்பட்டார். திருத்தொண்டர்கள் இருமருங்கும் கின்று போற் றிசைப்ப, எங்கும் வேத ஒலியும் தே ஒலியும் முழங்க, இசைக் கருவிகள் இயம்ப, அங்கங்கே தோரணங்களும் கொடிகளும் காற்றி மக்கள் எதிர்கொள்ள, மலர்மாளி பொழியச் சம்பந்தப்பெருமான் இடையே உள்ள திருத் தலங்களுக்குச் சென்று வழிபட்டார். திருஅகத்தியான் பள்ளி, கோடிக்குழகர், கடிக்குளம், திரு இடும்பாவனம், திருவுசாத்தானம் முதலிய தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடினர். பாலே நிலத்தையும் நெய்தல் கிலத்தையும் கடந்து, மருத கிலத்து வழியே சென்று சோழ நாட்டையும் கடந்து, அப்பால் மறவர் வாழும் இடங்களையும் கடந்து, பாண்டி காட்டை அடைந்தார். கொடுங்குன்றமென்னும் பிரான் மலையை வணங்கித் தமிழ்ப் பதிகம் பாடி மதுரையை நோக்கி வருவாராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/58&oldid=784025" இலிருந்து மீள்விக்கப்பட்டது