பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவேற்பு 53 வரவேற்பு திருஞானசம்பந்தப் பெருமான் வருவதற்கு முன்பே மதுரையிலும் அதைச் சார்ந்த ஊர்களிலும் உள்ள சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் உண்டாயின. அவற்றைக் கண்டு அஞ்சிய அவர்கள் மதுரையில் வந்து கூடினர். அச்சமயத்தில் பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க் கரசியாருக்கும், அமைச்சர் குலச்சிறையாருக்கும் பல கன்னிமித்தங்கள் உண்டாயின. அப்போது வெளியூர் சென்றிருந்த அன்பர்கள் வந்து, சம்பந்தப் பெருமான் மதுரைக்கு எழுந்தருளி வரும் செய்தியைச்சொன்னர்கள். அதனே அறிந்த குலச்சிறையார் மகிழ்ச்சி மீதுTர, அதனே அரசியாரிடம் வந்து கூறினர். அரசியார், 'அந்த ஞான போன கரை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வாருங் கள்' என்ருர், குலச்சிறையார் அந்தக் கட்டளையை மேற் கொண்டு மதுரைக்குப் புறத்தே சம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொள்ளச் சென்ருர். மங்கையர்க்கரசியார், "ஆலவாப் அமர்ந்த இறையவனேக் கும்பிடவேண்டும்” என்று அரச னிடம் சொல்லி, ஏவலரோடும் காவலரோடும் திருக் கோயிலை அடைந்து, ஆலவாயப்பனை வணங்கி, ஞான சம்பந்தரை எதிர்நோக்கி யின்ருர். - முத்துச் சிவிகையில் ஏறி முத்துக்குடை விழற்ற, திருநீறு அணிந்த தொண்டர்கள் கூட்டமாக உடன் வர, சம்பந்தர் மதுரையை கோக்கி எழுந்தருளினர். மந்திரித் தலைவராகிய குலச்சிறையார் அந்த கற்றவக் கடலேத் தரிசிக்கச் சென்று தொண்டர் கூட்டத்தின்முன் கிலத்திலே விழுந்து பணிந்தார். தொண்டர்கள் அவரை எழுப்ப, அவர் எழாமலே கிடக்க, அவர் வரவையும் சிலையையும் அவர்கள் பிள்ளையாரிடம் சென்று சொன்னர்கள். அது கேட்ட சம்பந்தர் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து விரைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/59&oldid=784028" இலிருந்து மீள்விக்கப்பட்டது