பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5拿 திருஞான சம்பந்தர் சென்று, குலச்சிறையாரை அணுகித் தம்முடைய கரகமலங் களால் பற்றி எடுக்க, அவர் அஞ்சலி செய்தபடியே சின்ருர். அப்போது சம்பந்தப் பெருமான், 'செம்பியர் பெரு மான் குலமகளாராகிய மங்கையர்க்கரசியாருக்கும் உமக்கும் கம்பெருமானுடைய திருவருளால் நலம் நன்கு அமைக் துளதா?" என்று கேட்டார். அது கேட்ட அமைச்சர் மண்மிசைத் தாழ்ந்து வணங்கி, "இதுகாறும் சென்ற காலத்தில் எங்களுக்கு யாதொரு பழுதும் வராமல் வாழ்ந் தோம். இனி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதைத் தேவரீர் இன்று எழுந்தருளப் பெற்ற பேற்றினல் உணர் கிருேம். திய நெறியில் அழுந்திய நாடும் உய்யும்; கற்றமிழ் வேங்தனும் உய்வான்; திருநீற்ருெளி எங்கும் விளங்கும் என்ற கம்பிக்கையும் பெற்ருேம். இங்கே தேவரீர் எழுங் தருளுவதைக் கேட்டு மங்கையர்க்காசியார் நம்முடைய வாழ்வு எழுந்தருளியதென்று மகிழ்ந்து, அடியேனே எதிர் கொள்ளும்படி பணித்தார்கள்” என்று கூறினர். அது கேட்டுக் கருணைபுரிந்த சம்பந்தர், "எம்பெருமான் எழுங் தருளியிருக்கும் திருவாலவாய் எப்பக்கத்தில் இருக்கிறது?" என்று கேட்க, "அதோ கோபுரம் தோன்றுகிறதே, அது தான்” என்று அமைச்சர் காட்டினர். சம்பந்தர் தம் கரம் குவித்துப் பின் மண்மிசை வீழ்ந்து பணிந்து ஒரு திருப்பதிகம் பாடலானர். மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவ&ளக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநாயகன்.நால் வேதமும் பொருள்களும் அருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/60&oldid=784030" இலிருந்து மீள்விக்கப்பட்டது