பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவேற்பு 55 அங்கயற் கண்ணி தன்ளுெடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே! என்பது அப் பதிகத்தின் முதல் திருப்பாட்டு. பின்பு மதுரையை அடைந்து திருக்கோயிலிற் புகுந்து வலம்வந்து எம்பெருமானைப் பணிந்து திருப்பதிகம் பாடி ஞர். மிக்க ஆர்வத்துடன் பதிக இசை பாடிப் புறத்தே வந்தார். அவர் கோயிலினுள் புகும்போது அங்கே இருந்த மங்கையர்க்கரசியார், இறைவனே அப் பெருமான் வழிபடச் சென்றமையால் எதிர்வராமல் ஒதுங்கி கின்ருர். அவர் வழிபட்டுப் புறம் போந்தபோது அவர் முன்பு எய்தினர். குலச்சிறையார், அரசியாரை இன்னரென்று சொல்லிக் காட்ட, அப் பெருமாட்டியார் அந்தச் சிவக்கன்றின் திருவடி களே வணங்கினர். உள்ளம் உருகிக் கண்ணிர் ததும்ப, “யானும் என் கணவரும் என்ன தவம் செய்தோமோ!' என்று பணிவுடன் கூறினர். சம்பந்தர், "சுற்றிலும் அயற்சமயம் செறிந்திருக்க, அதனிடையே சிவத் தொண்டு புரிந்து வாழும் உம்மைக் காணத்தான் வந்தோம்' என்ருர். குலச் சிறையார் காட்டு நிலையையெல்லாம் எடுத்து உரைத்தார். சம்பந்தர் அரசி யாருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தொண்டர்கள் சூழ ஊருக்குள் சென்ருர். அங்கங்கே சிவனடியார்கள் வந்து தரிசித்துப் பணிந்து இன் புற்ருர்கள். பிறகு அமைச் சர் ஒரு திருமடத்தைக் காட்ட, அங்கே தம்முடன் வந்த பரிசனங்களுடன் பிள்ளையார் தங்கினர். அவருக்கும் அவருடன் வந்த அடியவர்களுக்கும் அரசியார் விருப்பப்படி அமைச்சர் விருந்தளித்தார். பகல் போய் இரவு வந்தது. அடியார் கூட்டத்துடன் மாமறைத் தலைவராகிய சம்பந்தர் வருவதைக் கண்ட சமணர்கள் அந்த இரவில் ஓரிடத்தில் கூடினர்கள். அப்பெருமான் தங்கியிருந்த திரு மடத்தில் தொண்டர்கள் திருப்பதிகங்களைப் பாடினர்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/61&oldid=784031" இலிருந்து மீள்விக்கப்பட்டது