பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருஞான சம்பந்தர் அதனைக் கேட்கப் பொருத சமணர்கள் உளம் கலங்கினர். அரசனிடம் சென்று சொல்வோம் என்று யாவரும் அரண்மனையை அடைந்தனர். காவலரிடம் சொல்லியனுப்பி, பாண்டிய மன்னன் வருகவென்று பணிக்க உள்ளே சென்று அவனேக் கண்ட னர். அரசன், "நீங்கள் யாவரும் ஒருங்கே திரண்டு வரும்படி என்ன நடந்தது?” என்று கேட்க அவர்கள், 'அரசே, கின்னுடைய மதுரையில் ஒரு சைவ வேதியன் வந்ததைக் கண்டோம். அதனல் காங்கள் கண்டு முட்டு ஆைேம்” என்ருர்கள். "அப்படியானல் கான் கேட்டு முட்டு. அந்தச் சிவனடியார் இம் மாநகர் வந்ததற்குக் காரணம் என்ன? அவர் யார்?' என்று கேட்டான் அரசன். "சோழநாட்டில் சீகாழியில் குலபாணியிடம் ஞானம் பெற்றவனம். பிராமண கிைய அவன் அடியார் கூட்டத் தோடு முத்துப் பல்லக்கில் எங்களே வாதில் வெல்ல வந்திருக்கிருன்' என்று சமணர்கள் கூறி, தாம் கேட்டறிந்த செய்திகளையும் சொன்னர்கள். "அப்படியா? அந்த வைதிகப் பிராமணன் இங்கே வந்தானென்ருல் நாம் என்ன காரியம் இப்போது செய்வது?" 'நாம் அவனே வலி செய்து போக்கவேண்டாம். அவன் உறையும் மடத்தில் மந்திரஞ் செய்து தீ மூளச் செய்து விட்டால், அவன் இங் நகரில் இராமல் போய்விடுவான்.” "அப்படியானல் அந்தக் காரியத்தை விரைவிலே செய்யுங்கள்” என்று அரசன் கூறி அவர்களே அனுப்பி விட்டு, ஒன்றும் பேசாதவளுய்த் தன் அமளியில் போய்ப் படுத்தான். அங்கே வந்த மங்கையர்க்கரசியார் அவன் ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு. 'தங்களுக்கு என்ன வருத்தம் வந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/62&oldid=784032" இலிருந்து மீள்விக்கப்பட்டது