பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தின் திருவுரு 5? "காவிரி நாட்டில் உள்ள சீகாழியிலிருந்து சிவன் அருள் பெற்று ஒருவன் ம்ே அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கிருன். அவனேயும் அவனுடன் வந்துள்ள நீறு பூசிய தொண்டரையும் அடிகள் மார் கண்டு முட்டா யினர். நான் கேட்டு முட்டானேன். இதுதான் விகழ்ந்தது" என்ருன். அதுகேட்ட அரசியார், "வாது நடந்தால் யார் வெல் கிருர்களோ அவர்கள் பக்கம் சேர்ந்துகொள்ளலாம். இதற் காகத் தாங்கள் வருந்தவேண்டாம்” என்ருர். இப்படிச் சொன்னுலும் அரசியார் உள்ளத்துள்ளே பேருவகை பூண் டார். அங்கிருந்து அகன்று குலச்சிறையாரிடம் இந்தச் செய்தியைக் கூறினர். அவரோ, பிள்ளே யார் இங்கே அணேந்திடப் பெறும் பெரும் பேற்றைப் பெற்ருேம்” என்று மகிழ்ந்தார்; உடனே, "ஆல்ை அப்பெருமானே இந்தச் சமணர்கள் என்ன வஞ்சனை செய்வார்களோ, தெரியவில்லையே!” என்று இரங்கினர். அரசியாரும் அஞ்சி, 'இந்த வஞ்சகர்கள் எந்த இழிதொழிலையும் செய்ய வல்லவர்களே. சம்பந்தப் பெருமானுக்கு ஏதேனும் தீங்கு கேரிள் காமும் உயிர் துறந்து ஒழிகுவோம்" என்று கூறினர். ஞானத்தின் திருவுரு சிமணர்கள் தாம் தீர்மானம் செய்தவாறே தங்கள் மந்திரத்தால் ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் கியைச் சாரும்படி செய்யலானர்கள். அவர்கள் செய்த மந்திரம் ஒன்றும் பலிக்கவில்லை. அதனல் தளர்ச்சி அடைந்த அவர்கள், "இந்தச் செய்தியை நம் மன்னன் அறிந்தால் நம் பெருமையை எண்ணுமல் இகழ்வான்; நமக்கு வழங்கியிருக்கும் இறையிலி விலங்கள் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/63&oldid=784033" இலிருந்து மீள்விக்கப்பட்டது