பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருஞான சம்பந்தர் வற்றை எடுத்துக்கொள்வான்” என்று அஞ்சினர்கள். மந்திரம் பலிக்காவிட்டாலும் தந்திரமாவது பலிக்கட்டும் என்று எண்ணி யாரும் அறியாமல் மறைந்து சென்று அந்த மடத்தில் நெருப்பை வைத்துவிட்டார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் இட்ட தீயானது பற்றி எரிவது கண்டு துயிலுணர்ந்த தொண்டர்கள் அதனே அவித்துவிட்டு, ஞானசம்பந்தரிடம் சென்று சமணர் செய்த தீய செயலேச் சொன்னர்கள். சம்பந்தப்பிள்ளையார், “மாதவர் பலர் துயிலும் இந்தத் திருமடத்தில் இரவிலே இந்தத் தீமை புரிவதா? ஐயோ! பாவிகளே!” என்று இரங் கினர். 'என்பொருட்டு அவர்கள் இந்தத் திங்கைச் செய் தாலும் இங்கே எத்தனை சிவனடியார்கள் இருக்கிருர்கள்! அவர்களுக்குத் தீங்கு நேருமோ? என்று கூறி, "இப்படிச் செய்தவர்கள்மேல் குற்றம் இருப்பினும், இத்தகைய செயல்கள் நிகழும்படியாக நாட்டின் கிலே இருக்கிறதென் பதை உணராமல் ஆட்சிபுரியும் வேந்தனுடைய குற்றக் தான் பெரிது' என்று எண்ணினர். உடனே ஒரு திருப்பதிகம் பாடி, "இந்த அழல் பையவே சென்று பாண் டிய மன்னன்பால் சேரட்டும்' என்று வாய்மலர்க் தருளினர். சேய்ய னேதிரு ஆலவாய் மேவிய ஐய னே,அஞ்சல் என்றருள் செய்,எனப் பொப்ய ராம்.அம ணர்கொளு வும்சுடர் பிைய வேசென்று பாண்டியற் காகவே என்பது அப் பதிகத்தின் முதற்பாடல். ஒவ்வொரு பாடலி லும், 'அமணர் இட்ட தீயானது பாண்டியனேச் சாரட்டும்" என்ற கருத்தை வைத்துப் பாடினர். இறுதிப் பாட்டா கிய திருக்கடைக்காப்பில் இதனைப் பாடிய காரணத்தை, வெளியிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/64&oldid=784034" இலிருந்து மீள்விக்கப்பட்டது