பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தின் திருவுரு 59 அப்பன் ஆலவாய் ஆதி அருளிளுல் வெப்பம் தென்னவன் மேலுற, மேதினிக்கு ஒப்ப ஞானசம் பந்தன் உரையத்தும் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. முதல் பாட்டில், அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே' என்று அருளினர். பையவே என்பது மெல்ல என்ற பொருளுடையது. அவ் வாறு சம்பந்தப்பெருமான் அருளியதற்குரிய காரணம் இன்னவை என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் விளக்குகிருர். ஐந்து காரணங்களே அங்கே கூறுகிருர். (1) மங்கையர்க்கரசியாருடைய திருமங்கல காணப் பாது காக்க வேண்டும் என்ற எண்ணம், (3) குலச்சிறையாருக்கு அரசன்பால் உள்ள அன்பு, (3) அரசன் அபராதம் செய்த தற்குத் தண்டனையும் வேண்டும் என்ற கினேவு, (4) மீண் டும் அரசன் சிவநெறியடைந்து வாழவேண்டும் என்ற அருள், (5) அவனுடைய வெப்பு நோய் அகலும்படி சம்பந்தப் பெருமான் தம் திருக்கையால் திருநீறு இடத் திண்டும் பேறு அவனுக்கு இருத்தல் - இந்த ஐந்தையும் கூறும் பாடல வருமாறு: 'பாண்டிமா தேவியார் தமது பொற்பிற் பயிலுநெடு மங்கல நாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி ஞலும் அரசன்பால் அபராதம் உறுத லாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியி னுலும் வெண்ணிறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டிஇடப் பேறுடையன் ஆத லாலும் திப்பிணியைப் பையவே செல்க என்ருர்.' அபராதமுடையவன் அரசன் என்பது அவனைத் தண்டிப்பதற்கு ஏற்ற காரணம் , அவன் உடம்பைத் தீண்டித் திருநீறு இடப்பெறும் பேறு இருப்பது, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/65&oldid=784035" இலிருந்து மீள்விக்கப்பட்டது