பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருஞான சம்பந்தர் உடம்பில் அந்தத் தி வெப்பாக அமைவதற்குக் காரணம். மற்ற மூன்று காரணங்களும் அவனே இறந்துபடாமல் வைத்து, துன்பம் அடையுமளவுக்கு அந்த வெப்பு மூளுவ தற்கு உரியவை. இந்தப் பதிகத்தைப் பாடியவுடன் பாண்டிய மன்னனே வெப்பு நோய் பற்றியது. அவன் துடிதுடித்து வெம்பி மறுகினன். - சூரியன் உதயமானன். இாவில் திருமடத்தில் தீ வைத்துவிட்டார்கள் என்ற செய்தி குலச்சிறையார் காதில் விழுந்தது. "ஐயோ! இனி காம் உயிரை விட்டு விட வேண்டியதுதான்” என்று அவர் பதைபதைக்கும் போது, சிவனடியார்களுக்குத் தீங்கு யாதும் இல்லை என் பதைச் சிலர் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட அமைச்சர் ஆறுதல் பெற்ருரேனும், இந்தப் பாதகர்கள் செய்யும் தீங்கு இனி எப்படிப் போய் முடியுமோ? என்று எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அரசனுடன் இருந்த காவலர்கள் அவ னுக்குக் கொடிய வெப்பு நோய் வந்திருப்பதைப் பாண்டிமா தேவிக்குச் சொல்ல, அவர் மன்னனே அணுகினர். அச்ச மும் வேகமும் உந்தக் குலச்சிறையாரும் மன்னவனிடம் சென்ருர். அரசன் சுரநோயால் வெதும்பினன். அருகில் கின்றவர்மேலும் அதன் வெப்பம் வீசியது. அரச அடைய உணர்வும் உயிரும் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி கின்றன. அவனே அணுகினவர் யாரும் அஞ்சிச் சற்றுத் தூரத்தே அகன்று கின்றனர். வாழைக் குருத்துக் களேக் கொண்டு அவனருகில் இட்டு வெப்பத்தைத் தணிக்க முயன்றனர். அவை தீய்ந்து சருகாயின. மருத்துவர் பலர் வந்தனர். மருத்துவ நூல் முறைப் படியே பலவகைப் பரிகாரங்களேச் செய்தனர். அவற்ருல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/66&oldid=784037" இலிருந்து மீள்விக்கப்பட்டது