பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தின் திருவுரு 6 í வெப்பு நோய் இராமல் மேன்மேலும் மிகுதியாயிற்று. பாண்டியன் உணர்விழந்து கிடந்தான். அரசனுடைய கிலேயைக் கேட்ட சமணர்கள், காம் கேற்று இரவு செய்ததுதான் இப்படி விளங்ததோ!' என்று அஞ்சி, அவனே அணுகினர்கள். அரசனுடைய வெப்பு நோயைத் தம்முடைய மந்திர சக்தியால் தீர்த்து விடலாம் என்ற எண்ணத்துடன், அதனைச் சொல்லி மயில் பீவியால் அவன் உடம்பைத் தடவிஞர்கள். வெப்பு மிகுதியால் தடவிய பீலியும் கருகியது. பிறகு தம் கையி லுள்ள கமண்டலத்தின் ைேர அரசன்மேல் தெளித்து மந்திரத்தை நவின்றனர். அந்த நீர் எரியிலிட்ட கெய் போலாகிப் பின்னும் வெப்பத்தை மிகுதியாக்கியது. அதனல் மிக வெதும்பிய அரசன், 'நீங்கள் என் பக்கத் தில் இருக்கவேண்டாம்; யாவரும் போங்கள்" என்று சொல்லி அயர்வுற்ருன். இதைக் கண்ட மங்கையர்க்காசியார் வருக்தி, குலச் சிறையாரை நோக்கி, "இரவில் காழிப்பிள்ளையாருக்குச் சமணர் செய்த இங்கு இவ்வாறு வந்து முடிந்ததோ?” என்ருர். "ஆம், அவர்கள் சிவனடியார்பால் செய்த திமையே இங்கே அரசனிடம் வந்து பற்றியது. இவர்கள் இதைத் தீர்க்கப் புகுந்தால் பெருகுமேயன்றிக் குறை: யாது" என்று அமைச்சரும் சொன்னர். பிறகு இருவரும் அரசனேப் பணிந்து, "இந்த வெப்பு உண்டாவதற்குக் காரணம், சம்பந்தப் பெருமானுக்குச் சமணர்கள் செய்த அநுசிதமே இதற்குத் தீர்வு அப் பிள்ளையாருடைய அருள்தான். ஆகவே அப்பெருமான் இங்கே எழுந்தருளித். தம் திருக்கடைக்கண் கோக்கத்தைப் பாலித்தால் இய. இப்பிணியே அன்றிப் பிறவியும் திரும்’ என்ருர்கள். 'ஞானசம்பந்தர் திருகாமமே மந்திரம் போலச் செவியில் பட அரசன் சற்றே தெளிவு பெற்ருன்; 'இவர்கள் செய்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/67&oldid=784039" இலிருந்து மீள்விக்கப்பட்டது