பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 திருஞான சம்பந்தர் யெல்லாம் இந்த கோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவாயின. அந்தச் சைவ திே மாமறைச் சிறுவர் வந்து அருள்புரிய இந்த கோய் அகலுமால்ை அதனேயும் அறியலாம்” என்று சொல்லிப் பின்னும், 'கான் படும் இந்த வேதனேயைத் தீர்ப் பதில் யார் வெல்கிருர்களோ அவர்கள் பக்கம் நான் சேர்வேன். அவரிடம் தீர்க்கும் முறை இருந்தால் அழைத்து வாருங்கள்' என்ருன். அதுகேட்ட அரசி யாரும் அமைச்சனரும் உவகை பொங்க மிக்க ஆர்வத் தோடு சம்பந்தப் பெருமானே அழைத்துவரப் புறப்பட்டார் கள். மங்கையர்க்கரசியார் சிவிகை ஏறிச் சென்றும் குலச்சிறையார்கடந்து சென்றும் மடத்தைச் சார்ந்தார்கள். தம் வரவைச் சொல்லியனுப்பி, இசைவுபெற்று உள்ளே புகுந்து சம்பந்தரைக் கண்டு வணங்கினர்கள். இதற்குமுன் மதுரைக்குத் திருஞான சம்பந்தர் எழுங் தருளியபோது தரிசித்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். அப் போது அப்பெருமானை அரசன் அறியாமல் அவர்கள் வர வேற்ருர்கள். ஆதலின் உரிமையோடு அச்சம் சிறிதும் இல்லாமல் அவரைத் தரிசித்து இன்புற இயலவில்லே. ஆனல் இப்பொழுதோ அரசனே அழைத்துவரும்படி சொல்லிவிட்டான். சற்றும் ஒளிமறைவு இன்றி யாவரும் காண அப்பெருமானைத் தம் அரண்மனைக்கே அழைத்துச் செல்ல வந்திருக்கிருர்கள். முன்னே கிலேக்கும் இந்த கிலேக்கும் எத்தனே வேறுபாடு! சம்பந்தப் பெருமானுடைய திருப்பார்வை பட்டால் அரசன் உய்வான் என்ற உறுதியான எண்ணம் அவ்விரு வருக்கும் இருந்தது. மன்னன் அப்பெருமானுடைய தரிசனத்தை எப்படியாவது பெற்று உய்யவேண்டுமே என்று எங்கினவர்கள் அவர்கள். இப்போது அது சிறை வேறப்போகிறது. ஆதலால் அவ்விருவரும் உணர்ச்சியால் நிறைந்து கின்றனர். இப்போது அந்த மன இயல்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/68&oldid=784041" இலிருந்து மீள்விக்கப்பட்டது