பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தின் திருவுரு 63 கண்களை அகலத் திறந்து திருஞான சம்பந்தரை அவர்கள் கண்டார்கள். முன்பு அஞ்சிக் கண்ட கிலே அன்று இது: இப்போது உரிமையோடு, தடையின்றி, ஆர்வத்தோடு, இனி வர இருக்கும் பெரும்பேறு அனைத்திற்கும் மூலமான நிகழ்ச்சிக்கு அடிப்படைச் செயலாக அவர்கள் காணு கிருர்கள். ஆதலின் இங்கே சேக்கிழார், அவர்கள் ஞானசம்பந்தரைக் கண்டார்கள் என்று போகிற போக்கில் சொல்லி விட்டுவிடவில்லை. எப்படிக் கண்டார்கள் என்று ஒரு முழுப் பாடலாலே விளக்குகிருர். அருமையான பாடல் அது. "ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துனேயை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேன்.நக்க மலர்க்கொன்றைச்செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.” அவர் ஞானசம்பந்தர்; சிவஞானமே வடிவாக அமைக் தவர். தாய்ப்பாலுண்டு வளரும் ஊன உடம்பையுடையவர் கள் மற்றக் குழந்தைகள். இந்தக் குழந்தையோ அம்மை யருளிய ஞானப்பாலே உண்டு வளர்ந்த ஞான உடம்பை உடையவர். அவருக்கே உரிய சிறப்பு அது. ஆதலின் முதலில், "ஞானத்தின் திருவுருவை' எனருா. மறையவர் குலத்தில் உதித்தவர் அவர். கான் மறையை முழக்கும் தொண்டை வளரச் செய்கிறவர். வைதிக வாழ்வு தேய்ந்து வேத ஒலி மங்கிய பாண்டி காட்டில் மீண்டும் வேதமுழக்கம் உண்டாகும்படி வந்திருக் கிறவர். நான்மறையின் வழக்கத்தைப் பாண்டிய மன்ன னும் அவன் ஆட்சியில் அடங்கிய மக்களும் கைவிட்டு விட்டார்கள். மறை துணையின்றி மலங்கியது. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/69&oldid=784044" இலிருந்து மீள்விக்கப்பட்டது