பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தோற்றுவாய் ஏழாவது நூற்ருண்டு : தமிழ் நாட்டின் வடக்கே பல்லவ அரசனும் தெற்கே பாண்டிய அரசனும் வீறு பெற்றுக் கோலோச்சிய காலம். வீரமும் விறலும் காட்டிப் போர் செய்து வெற்றி பெற்ற பின்னர் அம் மன்னர்கள் நாட்டினர் வாழ்க்கையில் கவனம் செலுத்தலானர்கள். சமயத்துறையிலும் அவர்களுடைய உள்ளங்கள் சற்றே புகுந்தன. அக்காலத்தில் சைன சமயத்தில் ஊற்றமுள்ளவர்கள் காஞ்சியிலும் மதுரையிலும் பலர் இருந்தார்கள். சைன சமயத்தின் பெருமையை வற்புறுத்தியும் மற்றச் சமயங் களே இழித்தும், அறிவாற்றல் கொண்டு மக்களுக்குப் பிரசாரம் செய்து வந்தார்கள். பல்லவனும் பாண்டியனும் சைனமதத்தைத் தழுவினர்கள். அவர்களுடைய ஆட்சியில் அச்சமயத்துக்குச் சிறப்பும், அது பரவும் வாய்ப்பும் உண்டாயின. சமயவாதிகள் அரசர்களோடு பயின்று அவர்களுடன் ஒன்றி அரசியலிலும் தலையிட்டார்கள். இதனுல் சிவபெருமான வணங்குபவர்களுக்கும் திருமாலே வழிபடுபவர்களுக்கும் மறைமுகமான பல இடையூறுகள் நேர்ந்தன. சிவாலயங்கள் விளக்க மழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/7&oldid=784046" இலிருந்து மீள்விக்கப்பட்டது