பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருஞான சம்பந்தர் மீண்டும் தலையெடுக்கும்படி செய்ய ஒப்பற்ற துணையாக இவர் எழுந்தருளியிருக்கிருர். ஆதலின், "நான்மறையின் தனித்துணையை” என்ருர். பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயை இனி நீக்கப் போகிருர். வெப்பத்துக்கு மாற்றுத் தண்மை. குளிர்ச்சிக்கு இடமானது திங்கள். குளிர்ச்சியை உண்டாக்கும் ஹிம கரன் அவன். ஞானசம்பந்தர் அருள் வழங்கிக் குளிரச் செய்யப்போகிருர். ஆதலின் அவர் திங்களைப் போன்றவர்; இளமை உடையவராதவின் மதிக்கொழுந்து என்று சொல்லலாம். தன் குலத்தில் பிறந்தவன் அல்லலுறு வதைப் பொருமல் வானிலிருந்து மதிக்கொழுந்து வந்தது. போல இருக்கிறது. வானில் உள்ள மதியம் தேய்ந்து குறையும். இந்த மதிக்கொழுந்தோ மண்ணில் ஒரு காலேக்கு ஒரு கால் வளர்கிறது. - 'வானத்தின் மிசைஅன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை." ஞானசம்பந்தப் பெருமானே இன்றும் நமக்கு வினைப்பு மூட்டிக்கொண்டிருப்பவை அவருடைய தேவாரப் பாடல் கள். தேவாரம் அவருடைய திருப்பாடல்களேயே முதலில் கொண்டு விளங்குகிறது. "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்" பெருமான் அவர். இடமும் காலமும் கடந்து தமிழ் நாடு முழுவதும் இன்றளவும் அவர் அருளிய இசை பரவி விளங்குகிறது. அவர் அருளிய கானம் சிவபெருமானது புகழை விரிப்பது. கொன்றை மாலையைச் செஞ்சடையிலே அணிந்த பெருமானுக்கு என்றும் வாடாத மாலையாக அமைந்தவை அவர் திருப்பாடல்கள். கொன்றையைப் பிரணவ மலர் என்பார்கள். தேவாரமும் பிரணவத்தை, "தோடுடைய செவியன்' என்ற தொடரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/70&oldid=784048" இலிருந்து மீள்விக்கப்பட்டது