பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தின் திருவுரு 65 முதலில் பெற்று விளங்குவது. தேன் பொங்கும் கொன்றை மலர் மாலையைச் செஞ்சடையில் அணிகின்ற சிவபிரானுடைய புகழைத்தொடுத்து அமைத்தபாமாலையை அருளினவர் ஞானசம்பந்தர். அவர் அவதரித்து இந்தக் கானத்தை அருளிளுரோ, அன்றி அந்தக் கானமே இப்படி உருவெடுத்துப் பிறந்ததோ? ஒரு பிறப்பிலே இந்தச் சிறப்பு வராது. சிவபெருமான் சீரைத் தொடுக்கவேண்டு மென்று இசைக் கலையே பிறவி ஏற்று வந்தது. ஒரு பிறப்பில் அது தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லே. இரண்டாம் முறையும் பிறந்து வளப்பம் பெற்றது. இப்படிப் பிறந்து பிறந்து பரிணுமம் பெற்று ஏழு பிறவிகளை எடுத்தது. அந்த ஏழாம் பிறவியிலே முழுமை பெற்றுவிட்டது. ஏழு பிறவிகள் பிறந்து முழுமை பெற்று வந்த, சிவபெருமான் சீர்தொடுக்கும் கானந்தான் ஞானசம்பந்தப் பெருமான். இசைக்கு ஆதாரமாக இருப்பவை ஏழு நரம்புகள்; அல்லது ஏழு சுரங்கள். இதல்ை ஏழிசையென்று சொல்வது ஒரு மரபு. ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு சுரமாக முழுமை பெற்று ஏ மு பிறவிகளில் ஏழிசையும் நிரம்பிக் குறைவிலா நிறைவாய் வந்த கோதிலாக் கானம் இது என்றே தோன்றுகிறது. " தேன்.நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பை.' அத்தகைய பெருமான மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் தம் கண்கள் களிக்கும்படி கண்டார்களாம். ' ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்து&ணயை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.” தி. ஞா. ச.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/71&oldid=784049" இலிருந்து மீள்விக்கப்பட்டது