பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருஞான சம்பந்தர் ஞானத்தின் திருவுரு, இனிப் பாண் டி காட்டில் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தைப் பரப்பப் போகின்றது; நான்மறையின் தனித்துணே, மறை வழக்கமிலாத மாபாவியரை அடக்கி வேதநெறி தழைத் தோங்கச் செய்யப்போகின்றது; மண்ணில் வளர்மதிக் கொழுந்து, மதிக்குலத்து மன்னவனே ஆட்கொள்ளப் போகின்றது; செஞ்சடையார் சிர் பேசும் கானத்தின் எழுபிறப்பு,இனி இங்கே எத்தனையோ திருநெறிய தமிழ்ப் பதிகங்களைப் பாடப் போகின்றது. ஆகவே, இனி வரப்போகும் பெரும்பேற்றை எண்ணிக் கண்ணும் மனமும் களிக்க அரசியாரும் அமைச்சனரும் சம்பந்தப் பெருமானே வணங்கினர்கள். வெப்பு நோய் தீர்த்தல் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு கிடக்க, அப்பெருமான் அவர்களே மெல்ல எடுத்து கிறுத்தினர்; 'உங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ? என்று வினவினர். சமணர்கள் செய்த வஞ்சனைக்கு அஞ்சி வருங் தினேம். ஆனல் தேவரீருடைய திருமேனிக்கு ஒன்றும் வாராது என்று கம்பி ஆறுதல் பெற்ருேம். இப்போது அவர்கள் செய்த தீங்கு மன்னர் பிரானிடம் போய் வெப்பு கோயாக எழுந்துவிட்டது. அந்த கோயைச் சமணர்கள் தம்முடைய மணி மந்திரங்களால் தீர்க்க எவ்வளவு பாடுபட்டும், அது நீங்வில்லை. தேவரீர் அங்கே எழுந்தருளிச் சமணர்களே வென்று அருள் புரிந்தால், மன்னர்பிரான் உயிரும் பிழைக்கும்; நாங்களும் உயிர் பிழைப்போம்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/72&oldid=784050" இலிருந்து மீள்விக்கப்பட்டது