பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பு நோய் தீர்த்தல் 67 'அவ்வாறே இறைவன் திருவருளால் செய்வோம்; நீங்கள் சிறிதும் அஞ்சவேண்டாம்” என்று சம்பந்தர் அவர்களேத் தேற்றினர். அது கேட்டு மீண்டும் அவ்விருவரும் அவரை வணங்கி எழுந்தார்கள். - "ஆலவாய் இறைவனைத் தரிசித்து விடைபெற்று வருவேன்' என்று ஞானசம்பந்தர் தொண்டர் கூட்டத் துடன் திருக்கோயிலே நோக்கிச் சென் ருர். அவருடன் அரசியாரும் அமைச்சரும் சென்றனர். இறைவனைப் பணிந்து, எம்பெருமானே, சமணர்களோடு வாதிட்டு வெல்ல எண்ணுகிறேன்; உன்னுடைய திருவுள்ளம் யாதோ?" என்று வேண்டி ஒரு திருப்பதிகம் பாடிஞர். மீட்டும், வேதத்தையும் வேள்வியையும் விந்தனை செய்து உழலுகின்ற சமணர்களேயும் பெளத்தர்களையும் வாது செய்து போக்க எண்ணுகிறேன். உன் திருவுள்ளம் இயையுமோ? ஞாலம் முழுவதும் உன் புகழே மிக வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று கூறி மற்முெரு பதிகமும் பாடியருளினர். வேத வேள்வியை நிந்தனே செய்துழல் ஆதம் இல்லி அமளுெடு தேரரை . வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுடன் ஆய பரமனே! ஞாலம் நின்புகழேமிக வேண்டும்; தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே! ஆலவாய் இறைவன் தன் அருளேக் குறிப்பால் தெரிவிக்க, ஞானசம்பந்தர் மிக்க மகிழ்ச்சியோடு கோயிலுக்குப் புறம்பே வந்து சிவிகையில் ஏறி அரண் மனேயை நோக்கிச் செல்லலாஞர். தொண்டர்கள் பலர் சூழ்ந்து சென்ருர்கள். மங்கையர்க்கரசியார் பின்னே ஒரு பல்லக்கில் வர, குலச்சிறையார் முன்னே தொண்டர் களுடன் சேர்ந்து கடந்து சென்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/73&oldid=784052" இலிருந்து மீள்விக்கப்பட்டது