பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருஞான சம்பந்தர் அரண்மனைக்கு அருகில் தொண்டர் கூட்டம் வந்து கொண்டிருந்தபோது குலச்சிறையார் விரைவாக முன் சென்று அரசனிடம் ஞானபோனகர் வருவதை அறிவித் தார். அவர் வரவைக் கேட்ட அளவிலே அரசன் சிறிது துயரம் நீங்கி, தன் தலைமாட்டிலே ஒரு பொன் ஆசனம் இடும்படி பணித்தான். அமைச்சரை எதிர்கொண்டு அழைத்து வரும்படி ஏவி, சம்பந்தர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அரசனுடைய மனப்பாங்கை உணர்ந்த சமணர்கள், இதுவா நம் சமயத்தை நாட்டும் வழி? என்று கவலை கொண்டார்கள். அரசனே நோக்கி, “நீ சைன சமயத்தைக் காவாவிட்டால் வேறு யார் காப்பாற்று வார்கள்? அவரை இங்கே வரும்படி அழைத்திருக்கிருய். அவரும் காங்களும் சேர்ந்து பிணியைத் தீர்க்கும்படி சொல்லி, அவரால் தீர்ந்தாலும் எங்களாலும் அகன்ற தாகச் சொல்ல வேண்டும்" என்று சொன்னர்கள். "இரண்டு சாராரும் நோயைத் தீருங்கள்; ஆளுல் நான் பொய் சொல்ல மாட்டேன்' என்ருன் பாண்டியன். அரண்மனே வாயிலை அடைந்த சம்பந்தர் சிவிகையி னின்றும் இறங்க, குலச்சிறையார் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ருர். பாண்டி மாதேவியாரும் பின்னே வந்தார். i சம்பந்தப் பெருமானேக் கண்டபொழுது பாண்டியன் கிடந்தபடியே தன்கையை எடுத்து அஞ்சலி செய்து, தலை மாட்டில் இருந்த பொற்பீடத்தைக் காட்டினன். தமிழ் விரகர் அதன்மேல் எழுந்தருளியிருந்தார். சமணர்கள் உள்ளத்தே அச்சம் குடிகொண்டது. அரசன், பிள்ளேயாருடைய திருமேனியைக் கண் களால் கன்ருகப் பார்த்தான். அப்போதே வெப்பு நோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/74&oldid=784054" இலிருந்து மீள்விக்கப்பட்டது