பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பு நோய் தீர்த்தல் 69 சிறிது தணிந்தது போலத் தோன்றியது. அவரை நோக்கி, 'தங்கள் ஊர் எது?” என்று கேட்டான். உடனே அப்பெருமான், தம் திருப்பதி பன்னிரண்டு திருப் பெயர்களே உடைய சிகாழி என்பதை ஒரு பதிகத்தால் உணர்த்தினர். அப்போது சமணர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தம்முடைய நூலிலிருந்து சில பகுதிகளைச் சொல்லி வாதிட அழைத்தார்கள். சம்பந்தர், 'உங்கள் சமய நூற் கருத்துக்களே அடைவாகச் சொல்லுங்கள்' என்று சொல்ல, சமணர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பலபல பேசலானர்கள். இந்த ஆரவாரத்தைக் கண்டு அஞ்சிய மங்கையர்க்கரசியார் அரசனே நோக்கி, “இந்தப் பெருமான் சிறிய திருமேனியையுடைய பிள்ளைப் பருவத் தினர். அவர்களோ எண்ணிலாதவர்கள். இவ்வளவு பேரும் ஒரு பக்கமும் பிள்ளையார் ஒரு பக்கமும் இருந்து பேசுவது எப்படி? முதலில் மன்னர்பிரானுடைய வெப்பு இவரால் நீங்கட்டும்; பிறகு இவர்கள் பேசட்டும்' என்று கூறினர். அரசன், “நீ வருந்தாதே' என்று அரசியாரைக் கை அமர்த்திச் சமணர்களே நோக்கி, ‘வேறு வாதம் எதற்காக? என்னுடைய வெப்பு நோயை நீங்களும் சிவனடியாராகிய இவருமாகத் தீர்த்து, உங்கள் தெய்வத் தன்மையை விளக்குங்கள்' என்ருன். மங்கையர்க்காசியார் அஞ்சுவதைக் கண்ட ஞானப் பிள்ளேயார், "இறைவன் திருவருள் துணை இருக்கும்போது என்ன பயம்? நான் இளம்பிள்ளே என்று நீ அஞ்சாதே. நான் இவர்களுக்கு எளியேன் அல்லேன்' என்ற கருத்தைப் புலப்படுத்தும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினர். அதன் முதற் பாட்டு வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/75&oldid=784056" இலிருந்து மீள்விக்கப்பட்டது