பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருஞான சம்பந்தர் மானின் நேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்: பால் நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி வெய்திடேல்: ஆனை மாமலே ஆதி யாய இடங்க ளிற்பல அல்லஸ் சேர் ஈனர் கட்கெளி யேன லேன் திரு ஆல வாய்அரன் நிற்கவே. (மானின் நேர் விழி - மான் கண்ணே ஒத்த கண்ணேயுடைய, மாதராய்-பெண்மணியே. பரிவு-இரக்கம். ஆனைமலே முதலிய எட்டு மலேகளில் சமணர்கள் தங்கித் தவம் புரிந்தார்கள்.) சமணர்கள் ஆரவாரம் எழுப்பிக்கொண்டே இருந்த னர். அரசன், "நீங்கள் இருவரும் இப்போது என் கோயைத் தீர்க்க முயலுங்கள். யார் திர்க்கிருர்களோ அவர்களே வாதில் வென்றவராவார்கள்” என்று கூற, சமணர்கள், 'காங்கள் உன்னுடைய இடப்பக்கத்தில் உள்ள வெப்பைத் திர்ப்போம்" என்று சொல்வி மந்திரம் போடத் தொடங்கி ஞர்கள், பீலியைக் கொண்டு அரசன் உடம்பைத் தடவி ஞர்கள். தடவத் தடவ வெப்பு அதிகமாயிற்றேயன்றிக் குறையவே இல்லை. அரசன் வெப்புத் தாங்காமல் ஞானசம்பந்தரைப் பார்த்தான். அவனுடைய பார்வைக் குறிப்பை உணர்ந்த பெருமான் வலப்பக்கத்தில் உள்ள வெப்பை நீக்கப் புகுக் தார். இறைவனுடைய திருற்ேறை எடுத்து, "மந்திர மாவது நீறு" என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பாடி வலப் பக்கத்தில் தடவினர். தடவியவுடன் அப்பகுதியில் இருந்த வெப்புத் தீர்ந்து தண்மை நிலவியது. அவ்வளவுக்கவ்வளவு இடப்பக்கம் தீயைப் போலச் சுரநோய் எரிக்கத் தொடங்கி யது. சமணர்களே அந்த வெப்பத்தைத் தாங்காமல் ஒதுங்கி கின்றனர். அவர்கள் பீலி கருகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/76&oldid=784057" இலிருந்து மீள்விக்கப்பட்டது