பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனல் வாதம் 71 அப்போது மன்னவன், 'இது என்ன வியப்பு என் உடம்பில் ஒரு பக்கம் நரக வேதனேயும் ஒரு பக்கம் வீட்டின்பமும் சேர்ந்து நிகழ்கின்றனவே! ஒரு பக்கம் கஞ்சும் ஒரு பக்கம் அமுதமும் இருப்பதுபோல இருக் கிறதே!' என்று கூறி, கொடிய சமணர்களே, நீங்கள் தோற்றுப் போனிர்கள். என்னே உய்யக் கொண்ட பெருமானே, மற்ருெரு பக்கத்து நோயையும் க்ேகியருளல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். திருமுகம் கருணை பொலியத் திருக்கரத்தால் திரு நிற்றை எடுத்து மற்றப் பக்கத்திலும் பிள்ளையார் ஒரு தடவை தடவவே, அரசன் வெப்பு நோய் முற்றும் நீங்கி ன்ை. அது கண்ட அரசியாரும் அமைச்சரும் ஞானசம்பக் தரை வணங்கி எழுந்தார்கள், அரசன் தன் தலையின்மேல் கைகளைக் கூப்பித் தொழுது, “ஞானசம்பந்தப் பெருமான் திருவடிகளே அடைந்து நான் உயிர் பிழைத்தேன்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினன். கனல் வாதம் ஞானசம்பந்தரிடம் பக்தி பாண்டியன் உள்ளத்தே மிகுதியாகி வருவதை அவனுடைய வார்த்தைகளால் உணர்ந்த சமணர்கள் அச்சம் கொண்டனர். இந்தச் சைவப் பிள்ளே பாட்டுப் பாடிப் பாண்டியன் வெப்பை ஒழித்ததைக் கண்டோம். இவருடன் தர்க்கமிட்டு வெல்ல வும் இயலாது. கனவினும் புனலினும் நம்முடைய தவ ஆற்றலால் வாதமிட்டு வெல்லலாம் என்று அவர்கள் என்ணினர்கள். நெருப்பையும் ைேரயும் தம்பனம் செய்யும் வித்தையில் வல்லவர்கள் அவர்கள். அப்போது சம்பந்தப் பிள்ளே யார், 'உங்கள் சமய உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள் வாதிடலாம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/77&oldid=784059" இலிருந்து மீள்விக்கப்பட்டது