பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 திருஞான சம்பந்தர் என்ருர். சமணர்கள், "தர்க்கவாதத்தினுல் கொள்ளும் வெற்றி வெற்றியாகாது. கண்கூடாகத் தெரியும்படி ஏதாவது செய்யவேண்டும்" என்ருர்கள். அது கேட்ட பாண்டியன், 'என் உடம்பு வெப்பு நோயால் வருக்திய போது உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை; உங்க ளுக்கு என்ன வாது இருக்கிறது?’ என்று கேட்டான். ‘என்ன வாது?’ என்று அவன் கேட்டதையே பற்றுக் கோடாகக் கொண்டு, "ஏட்டிலே அவரவர்கள் சமய உண்மைகளை எழுதி கெருப்பில் இட்டால் வேவாமல் இருக்குமாயின் வெற்றியாகக் கொள்ளலாம்” என்ருர்கள். அதனெதிர் பாண்டிய மன்னன் ஏதேனும் சொல்வதற்கு முன்பே சம்பந்தர், "நீங்கள் உரைத்தது நல்ல காரியம். எட்டைத் தீயிலிட்டு வேவாத வாய்மையை யுடையவர் வென்றவர் என்று கொள்வதானுல் வாருங்கள்; அப்படியே செய்யலாம்' என்று இசைக்தார். சமணர்கள் கனல் வாதத்துக்குச் சித்தமானுர்கள். அரசன் விறகு கொணர்ந்து தி மூட்டச் சொன்னுன், எரி கொழுந்துவிட்டு வளர்ந்தது. உடனே சம்பந்தப்பிரான் தாம் பாடிய பதிகங்கள் எழுதிய ஏட்டை அவிழ்த்துக் கையால் பிரித்துப் பார்த்தார். அவ்விடத்தில் திருநள்ளாற் துப் பதிகம் எழுதிய ஏடு இருந்தது. ப்ோகம் ஆர்த்த பூண்முலையாள் தின்ளுேடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்னாறே என்னும் பாசுரத்தை முதலாகக் கொண்டது. அது. அப்பதிகம் எழுதிய ஏட்டை எடுத்துத் திரு.கள்ளாற்றுப் பெருமான வணங்கிப் புதியதாக ஒரு திருப்பதிகம் பாடி அந்த எட்டை எரியில் இட்டார். அந்தப் பதிகம், "இறைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/78&oldid=784063" இலிருந்து மீள்விக்கப்பட்டது