பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனல் வாதம் 73 னுடைய நாமத்தை எரியில் இட்டால், பழுதின்றி கிற்கும்: இது சத்தியம்” என்ற கருத்தை உடையது: தளரின வளர்ஒளி தனதெழில் தருதிகழ் மலேமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின் நளிரின வளரொளி மருவுநள் ளா றர்தம் நாமமே மிளிரிள விளரெரி இடிலிவை பழுதிலே மெய்ம்மையே என்று தொடங்குவது அத் திருப்பதிகம். அந்த ஏட்டை எரியில் இட்டவுடன் அது தீயில் கருகா மல் பச்சையாய் விளங்கியது. அது கண்டு சமணர் நடுங்கி னர். தாங்களும் ஓர் ஏட்டை இட்டனர். சம்பந்தர் இட்ட ஏடு எரியாமல் இருப்பது கண்டு யாவரும் வியந்தனர். அதனைத் தியினின்றும் எடுத்து அவையிலுள்ளோர் யாவரும் காணக் காட்டி அதை மீட்டும் தேவாரம் எழுதிய சுவடியில் சேர்த்துக் கட்டினர் சம்பந்தர். மன்னவன் சமணரை நோக்கி, "உங்கள் ஏட்டை எடுத்துக் காட்டுங்கள்' என்ருன். அவர்கள் ஏடு தியில் வெந்து போயிற்று. பாண்டியன் ைேரக் கொண்டுவந்து தியை அவிக்கச் செய்தான். சமணர்கள் தங்கள் ஏடு கரியாகவும் சாம்பலாகவும் எரிந்து கிடப்பதைக் கண்டார் கள். அந்தக் கரியை அவர்கள் கையில்ை பிசைந்து துாற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் அவர்களே நோக்கிச் சிரித்து, "இன்னும் அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுபவர்களே! போங்கள்’ என்ருன்; 'யான் வெப்பு நோயில்ை வருந்தியபோது அதைத் தீர்க்கப் புகுந்து தோல்வியுற்றிர்கள். இப்போதும் உங்கள் ஏடு எரிந்து போயிற்று. இன்னும் நீங்கள் தோல்வியடைய வில்லையோ?” என்று இழித்துக் கூறினன். அப்போது சமணர், ‘இரண்டு முறை வாது செய் தோம். மூன்ரும் முறையாகவும் ஒன்று செய்யலாம். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/79&oldid=784065" இலிருந்து மீள்விக்கப்பட்டது