பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருஞான சம்பந்தர் கின்றன. சிவனடியார்கள் தம் மனத்துக்கு இயைந்த வண்ணம் வழிபாடு செய்ய வகை இல்லாமல் வருந்தினர்கள். இத்தகைய காலத்தில்தான் திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்தார். சிவபக்தியையும் அறத்தையும் வாழச் செய்யும்பொருட்டு இறைவன் அப்பெருமானே த் தமிழ் நாட்டில் அவதரிக்கத் திருவருள் பாலித்தான். அவர் அவதரித்தமையால் வேதநெறி தழைத்தது; சைவத்துறை விளங்கியது; உயிர்க்கூட்டங்கள் பொலிவுற்றன. இதனேத் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் ஒரு பாட்டில் குறிப்பிக்கிரு.ர். 'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.' (வேதத்தின் வழி மங்காமல் வளர்ந்து ஓங்கவும், மிக்க சைவத் துறை விளங்கவும், உயிர்க் கூட்டங்கள் வழிவழியே விளக்கம் பெறவும் தூய திருவாய் மலர்ந்து அழுத, குளிர்ச்சியும் வளமு முடைய வயல்கள் பரவிய சீகாழிப்பதியில் திருவவதரித்த திருஞான சம்பந்தப் பெருமானுடைய திருவடி மலர்களேத் தலைமேற்கொண்டு அப்பெருமான் செய்தருளிய திருத்தொண்டுகளேப் பாராட்டுவோம்.) திருஞானசம்பந்தப் பெருமான் சைவசமயாசாரியர் களில் முதல்வராக மதிக்கப் பெற்றவர். முருகப் பெருமா னுடைய திருவவதாரம் என்று ஒட்டக்கூத்தர், அருணகிரி நாதர் முதலிய புலவர் பெருமக்கள் துதித்துப் பாடியிருக் கிருர்கள். சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்ற நான்கு வகை நெறியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/8&oldid=784067" இலிருந்து மீள்விக்கப்பட்டது