பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருஞான சம்பந்தர் வென்ருல் எங்கள் சமயம் உண்மையானது என்று கொள்ளலாம்' என்ருர்கள். 'இதென்ன பேச்சு?’ என்று மன்னவன் மறுக்கவே, ஞானசம்பந்தர், வேறு வாதம் எப்படிச் செய்வது?" என்று கேட்டார். நாம் இருவரும் கம் சமய உண்மைகளை ஏட்டில் எழுதி ஆற்றில் இட்டால், எது ஆற்றேடு போகாமல் கிற்கிறதோ அதுவே உண்மைப் பொருளைச் சொல்வதாகும்' என்று சமணர் கூற, "அப்படியே செய்வோம்" என்று சம்பந்தப்பிரான் இசைக் தார். அப்போது குலச்சிறையாராகிய அமைச்சர், "இந்த வாதிலும் இவர்கள் தோற்ருல் என்ன செய்வது என்பதை உறுதி செய்துகொண்டு அதற்குமேல் இதைச் செய்ய வேண்டும்' என்று கூறினர். அதுகேட்ட சமணர் மானம் பொருராகி, ‘அப்படித் தோற்ருல் எங்களே அரசன் கழுவில் ஏற்றட்டும்” என்று கூறினர்கள். மன்னன், “நீங்கள் பகையில்ை இவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் பட்டவற்றை மறந்துவிட்டீர்கள். சரி, இனி வையையாற்றில் ஏடுகளை விடுவதற்கு காம் போவோம்' என்று இயம்பினன். யாவரும் வையையாற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் முன்பு போக, அவரைத் தொடர்ந்து பாண்டிய மன்னன் குதிரையின்மேலே ஏறிச் சென்ருன். மற்றவர்களும் கூட்டமாகச் சென்ருர்கள். புனல் வாதம் திருஞான சம்பந்தப் பெருமானும் மற்றவர்களும் வையையை நோக்கிச் செல்லும்போது நகரில் உள்ளவர்கள் அவர்களைக் கண்டு ஆரவாரித்தார்கள். அரண்மனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/80&oldid=784069" இலிருந்து மீள்விக்கப்பட்டது