பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனல் வாதம் ?む விகழ்ந்தவை எங்கும் பரந்து வியப்பை உண்டாக்கின. ஆதலின் வீதியில் உள்ளவர்கள் பேரார்வத்தோடு ஞான சம்பந்தப் பிள்ளே யாரைக் காண வந்து திரண்டார்கள். 'இதோ முத்துப் பல்லக்கில் எழுந்தருளும் பெருமான் தான்திருஞான சம்பந்தர்;இவரே ம்ே மன்னனுடையவெப்பு நோயைத் தீர்த்தருளியவர்' என்ருர் சிலர். “பாண்டி காடு நல்வாழ்வு பெறவேண்டுமென்று இந்தக் குழந்தை இங்கே வந்திருக்கிறது” என்ருர் சிலர். 'இந்த ஊரில் உள்ள சமணர்கள் கனல் வாதத்தில் தோல்வியுற்றது இவராலே" என்ருர் சிலர். 'சிவபெருமானுடைய இரு ேேற உண்மையான ஆற்றலுடையது என்பதைத் தெளிக் தோம்' என்றனர் சிலர். “இந்த முத்துச் சிவிகையில் இளம் பருவம் பிள்ளே யார் வருகிறது எவ்வளவு அழகாய் இருக்கிறது" என்று சிலர் அந்தக் காட்சியில் ஈடுபட்டனர். 'கம் கண்கள் அல்ல பயனேப் பெற்றன” என்றனர் சிலர். இவ்வாறு தெருவில் இரண்டு பக்கங்களிலும் உள்ள மக்கள் தங்கள் வியப்பையும், பக்தியையும், விருப்பத்தை யும் பலபலவாறு பேசிக் காட்டிக்கொண்டார்கள். பலவகை இன்னிசைக் கருவிகள் புடைசூழ்ந்து ஒலிக்க, தம் பின்னே பாண்டிய மன்னனும் மங்கையர்க்கரசி யாரும் வர, சமணர்கள் வேருேர் பக்கத்தில் திரண்டு வர, சம்பந்தப் பெருமான் வையையாற்றின் கரையை அணு கினர். நீர் வேகமாகச் சென்றுகொண் டிருந்தது. யாவரும் அங்கே அடைந்தவுடன் அரசன், அவரவர்கள் எடுகளே இந்த ஆற்றில் விடுக” என்ருன். சமணர்கள் தம்முடைய கொள்கையமைந்த வாக்கியங் களே எழுதி முதலில் ஆற்றில் இட்டார்கள். அது நீரோடு சென்று கடலை நோக்கி ஓடத் தொடங்கியது. அதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/81&oldid=784071" இலிருந்து மீள்விக்கப்பட்டது