பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருஞான சம்பந்தர் பிடிக்கச் சமணர்கள் ஒட, அது அவர்கள் கையில் கிடைக்கா மல் நீரிலே அடித்துச் செல்லப்பட்டது. அது அவர்களே கட்டாற்றில் விட்டுப் போய்விட்டது. அச்சம் தம் மனத்தை வருத்த, ஏடு கைப்படாமல் அவர் மீண்டனர்.

  • கர்ணவும் எய்தா வண்ணம்

கடலின்மேற் செல்லும் ஏடு நாணிலா அமணர் தம்மை - நட்ட்ாற்றில் விட்டுப் போகச் சேணிடைச் சென்று நின்ருர் சிதறிஞர்; திகைத்தார்; மன்னன் ஆணையில் வழுவ மாட்டா தஞ்சுவார் அணேய மீண்டார்.” அஞ்சி கடுங்கிய அவர்கள், "எதிர்க்கட்சியாரும் இட்டால் கடப்பதைப் பார்க்கலாம் ' என்ருர்கள். பாண்டிய மன்னன் ஞானசம்பந்தப் பிள்ளையாருடைய திருவுள்ளக் குறிப்பை அறியும்பொருட்டு அவரைப் பார்த்தான். அப்பொழுது அப்பெருமான் ஒரு புதிய திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர். அதற்குத் திருப்பாசுரம் என்று பெயர் வழங்கும். கெளசிகப் பண்ணில் அமைந்த அப்பதிகத்தின் முதற் பாசுரம் வருமாறு : வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் விழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தியதெல் லாம்.அரன் நாமமே சூழ்க வையக முத்துயர் தீர்கவே! பதிகம் முழுவதும் ஏட்டில் எழுதி, சம்பந்தர் ஆற்றில் இட்டார். அந்த எடு, பிறவியாற்றில் தவமுடைய மெய்ஞ் ஞானியர் மனம் எதிர் செல்வது போல, வையையாற்றின் நீரைக் கிழித்துக்கொண்டு எதிரே சென்றது. அது எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/82&oldid=784074" இலிருந்து மீள்விக்கப்பட்டது