பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனல் வாதம் 77 செல்வதை எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள். பாண் டிய மன்னனும் தலைநிமிர்ந்து எட்டிப் பார்க்க முயன்ருன். அவன் கூனுடையவனுதலினல் அவ்வாறு பார்க்கமுடியாது. ஆயினும் திருப்பாசுரத்தின் முதற் பாட்டில், "வேந்தனும் ஒங்குக' என்று ஞானசம்பந்தர் பாடிய சிறப்பிளுல் அவன் ஆன் திங்கி, ஏடு எதிர் செல்வதை நன்முகப் பார்த்தான். இந்த அற்புதங்களைக் கண்ட யாவரும்,"ஹர ஹர!" என்று சொல்லி ஆரவாரம் செய்தார்கள். ஆற்றை எதிர்த்துக்கொண்டு சென்ற ஏட்டை எடுக் கும் பொருட்டுக் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு அமைச்சராகிய குலச்சிறையார் சென்ருர், ஏடு போய்க் கொண்டே இருந்தமையால் அது ஓரிடத்தில் கிற்க வேண்டு மென்று எண்ணிய திருஞான சம்பந்தப் பெருமான், திருவேடகம் என்ற தலத்திலுள்ள இறைவனே ஒரு பதிகம் பாடித் துதித்தார். அத்தலம் வையையாற்றின் கரையில் இருக்கிறது. அத்தலத்துக்கு அருகே எடு கிற்க, குலச் சிறையார் குதிரையினின்று இறங்கி அதை எடுத்துக் கொண்டு வந்தார். * திருவேடகப் பதிகத்தில் எடு சென்று கரையை அணேந்த செய்தியைத் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டிருக் கிரு.ர். கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர் ஏடுசென் றணதரும் ஏட்கத் தொருவனே தாடுதென் புகவியுள் ஞானசம் பந்தன பாடல்பத் திவைவல்லார்க் கில்லேயாம் பாவமே! என்பது அத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பு. குலச்சிறையார் திருப்பாசுரம் எழுதிய ஏட்டுடன் திருஞானசம்பந்தரை அணுகி அவர் திருவடியை வணங்கி ஏட்டை யாவருக்கும் காட்டினர். அனைவரும் களிப்பினல் பெருமுழக்கம் செய்தார்கள். அப்போது பாண்டிய மன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/83&oldid=784075" இலிருந்து மீள்விக்கப்பட்டது