பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருஞான சம்பந்தர் அமைச்சரைப் பார்த்து, "இந்தச் சமணர்கள் சம்பந்தப் பெருமான் திறத்தில் குற்றப்பட்டார்கள். அவர்களே உரிய வகையில் தண்டித்து முறை செய்யவேண்டும்' என்ருன். தாம் தம் வாதத்தில் தோல்வியுற்ருலும் மேற்கொண்ட உறுதியில் தோல்வியுறக் கூடாதென்று எண்ணிய சமணர் கள். தாம் சொன்னபடியே கழுவிலேறி உயிர் நீத்தார்கள். அரசன் இப்போது திருற்ேறின் பெருமையையும் உண்மை அன்பின் உயர்வையும் நன்கு உணர்ந்து சைவ நீதி பாண்டி நாடெங்கும் விளங்கச் செய்தான். கூன் பாண்டியனுக இருந்த அவன் இப்போது கின்றசீர் நெடு மாறன் என்ற சிறப்பான பெயரைப் பெற்றதோடு, கின்ற சீர் நெடுமாற நாயனர் என்று அறுபத்து மூன்று நாயன் மாரில் ஒருவகுைம் பேறும் பெற்ருன். திருஞானசம்பந்தப் பெருமான் இறைவன் திருவருள் வல்லபத்தை எண்ணி உருகி ஆலவாய்ப் பெருமானத் தரிசிக்கச் சென்ருர். அவருடன் மங்கையர்க்கரசியாரும் பாண்டிய மன்னனும் பிறரும் சென்ருர்கள். ஞான சம்பந்தர் இறைவனே வணங்கி, 'வீடலால வாயிலாய்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். இத்தகைய அருளாளருக்கு ஆட்பட்டு நாம் உய்ந்தோமே! இறைவன் திருவருளால் இந்தப் பேறு கமக்குக் கிடைத்ததே! என்று எண்ணி மனம் கசிந்தான் பாண்டிய மன்னன். எம்பெரு மானே, சமணர்களுடைய வஞ்சகத்தில் மயங்கி அடியேன் உன்னே அறியாமல் இருந்தேன். அப்படியே இருந்த அடியேனது பிணியைத் தீர்த்து ஆட்கொள்ளும்படி திருஞான சம்பந்தப் பிள்ளையாரைத் தந்தருளினுய்' என்று ஆலவாயப்பனே ஏத்தினன்.

  • தென்னவன் பணிந்து நின்று 'திருவால வாயில் மேவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/84&oldid=784078" இலிருந்து மீள்விக்கப்பட்டது