பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர்களே வெல்லுதல் 79 மன்னனே, அாணர் தங்கள் மாயையால் கயங்கி பானும் உன்னே யான் அறிந்தி லேனே துயினி திர்த்தாட் கொள்ள இன்னருட் விண்ளே யாரைத் தந்தனே இறைவ' என்ருன்,” இறைவனைத் தரிசித்துக்கொண்டு யாவரும் தத்தம் இடம் சென்ருர் சம்பந்தப் பிள்ளையார் தமக்கென அமைத்த மடத்தில் தங்கினர். சில காலம் மதுரையில் இருந்து ஆலவாய்ப் பெருமானே வணங்கி இன்புற்ருர். புத்தர்களை வெல்லுதல் சிவஞானப் பெருங்களிறு போலே ஞானசம்பந்தப் பிள்ளையார் மதுரையில் தங்கியிருந்தபோது, ஆலவாய் இறைவனேப் பல பதிகங்களால் பாடி வணங்கினர். சீகாழியிலே இருந்த சிவபாக இருதயர் தம் குமாரர் மதுரைக்குச் சென்றிருப்பதை உணர்ந்து அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் உக்தவே, புறப்பட்டு மதுரையை வந்து அடைந்தார். தம் தகப்பளுரைக் கண்ட சம்பந்தர் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் தோனியப்பரை கினேந்து ஒரு பதிகம் பாடினர். ベ அப்பால் சிவத்தலங்களேத் தரிசிக்கும் விருப்பத்தோடு பிள்ளையார் மதுரையை விட்டுப் புறப்பட எண்ணினர். அவருடைய பிரிவை ஆற்றமாட்டாத பாண்டிய மன்னனும், மங்கையர்க்காசியாரும், குலச்சிறையாரும் மிக வருந்தினர். அது கண்ட சம்பந்தர், 'பாண்டி காட்டுத் திருப்பதிகளேத் தரிசிக்கு மட்டும் நீங்கள் என்னுடன் வாருங்கள்' என்று அருள, அம் மூவரும் மகிழ்ந்து அப்படியே அவரைத் தொடர்ந்து செல்வாராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/85&oldid=784080" இலிருந்து மீள்விக்கப்பட்டது