பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருஞான சம்பந்தர் அடியார்களோடும் மன்னன், அரசி, அமைச்சர் ஆகிய வரோடும் மதுரையைவிட்டுப் புறப்பட்ட ஞானச் செல்வர், திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், திருப்புத்துார், திருப் பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்ருலம், திருநெல்வேலி, இராமேசுவரம் ஆகிய தலங்களைத் தரிசித் தார். இராமேசுவரத்தில் சில காலம் தங்கியிருந்து அங்கிருந்த படியே இலங்கையிலுள்ள திருக்கோணமலை, திருக்கேதிச் சுரம் என்னும் இரண்டு தலங்களையும் பாடிப் பரவினர். இராமேசுவரத்தினின்றும் புறப்பட்டு, திருவாடானே, திருப்புனவாயில் என்னும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, வேறு இடங்களுக்கும் சென்று பரவிக் குலச் சிறையார் பிறந்த ஊராகிய மணமேற்குடிக்கு வந்தார். அங்கே சில நாள் தங்கிப் பிறகு சோழ நாட்டுக்கு மீண்டும் போகும் விருப்பத்தை மேற்கொண்டார். அவர் பாண்டி காட்டை விட்டுச் செல்வார் என்பதை உணர்ந்த பாண்டியன் முதலியோர் ஆராமை மீதுார வருங் தினர். அது கண்ட சம்பந்தர் அவர்களுக்குத் தக்கபடி ஆறுதல் கூறி விடைகொண்டார். சோழ நாட்டை அடைந்து பல தலங்களேத் தரிசித்து வரும்போது முள்ளிவாய் என்னும் ஆற்றின் கரையை அடைந்தார். அக்கரையில் கொள்ளம்பூதுார் என்ற தலம் தெரிந்தது. ஆற்றில் வெள்ளம் மிகுதியாக வந்து கோலும் கிலேக்காமற் போகவே, ஓடக்காரர்கள் ஒடத்தைக் கரையிலே கட்டிவிட்டுச் சும்மா இருந்தார்கள். திருக்கொள்ளம்பூதுார் சென்று இறைவனேத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மீதுார்ந்தது. ஆதனால் சம்பந்தர் ஒடத்தில் ஏறிக் கயிற்றை அவிழ்த்துவிட்டார். ஒடம் ஆற்றில் போகத் தொடங்கியது. அப்போது சம்பந்தர், "கொட்டமே கமழும்" என்ற திருப்பதிகத்தைப் பாடி யருள, ஓடம் யாரும் செலுத்தாமல் தானே அக்கரையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/86&oldid=784081" இலிருந்து மீள்விக்கப்பட்டது