பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர்களே வெல்லுதல் 81 போய் அடைந்தது. கீழிறங்கிய பெருமான் அடியார் களுடன் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனே இறைஞ்சினர். அப்பால் வேறு இடங்களுக்குச் சென்று திருநள்ளாற்றை அடைந்தார். கனல் வாதத்தில் இடு வதற்காகத் திருமுறைச் சுவடியில் கயிறு சாத்திப் பார்த்த போது வந்த பதிகம் திருநள்ளாற்றுப் பதிகம் என்பதை முன்னே கண்டோம். அந்த கினேவில்ை மீட்டும் திருகள் ளாற்றுக்கு வந்து இறைவனே இறைஞ்சி, "பாடக மெல் லடிப் பாவையோடும்” என்று புதிய திருப்பதிகம் ஒன்றைப் பாடினர். . அதன் பின்பு வேறு தலங்களைத் தரிசித்துக்கொண்டு போதிமங்கை என்ற ஊரை அணுகினர். அடியார்கள் புடைசூழ, “பரசமய கோளரி வந்தான்' என்று விருது காளம் ஊதச் சம்பந்தர் முத்துச்சிவிகையில் எழுங் தருளினர். அவ்வூரில் பெளத்தர்கள் பலர் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவகைப் புத்த நக்தி என்று ஒருவன் இருந்தான். - , , ' ' ". . - சிவசமயம் நிலைநிறுத்தும் சிங்க ஏருகச் சம்பந்தர் எழுந்தருளுவதைக் கண்டு பொருமையால் சிறிஞன் புத்த கந்தி. அடியார் கூட்டத்தின் முன் போய், “எங்கிள்ே வெல்லாமல் எப்படி நீங்கள் விருது காளம் ஊதுவீர்கள்?" என்று தடுத்தான். - இந்தச் செய்தியை அடியவர்கள் சம்பந்தரிடம் எடுத் துக் கூற, அவரோடு தக்க இடத்தில் வாது செய்து நம் சமயத்தை நிலைநிறுத்துவோம்" என்ருர். அதற்குள் புத்த் நந்தி செய்த மிடுக்குச் செயலைக் கண்டு பொருமல், ஞ்ான சம்பந்தப் பெருமான் அருளும் பதிகங்களே எழுதி வரும் தொண்டினை மேற்கொண்டிருந்த அடியார் ஒருவர் உள்ளம் வருந்தி, புத்தகந்தியின் தலைமேல் இடி விழுக!' என்று சபித்தார். அவருடைய உரையே இடியாக, புத்தகத்தி தி. ஞா. ச.-8 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/87&oldid=784083" இலிருந்து மீள்விக்கப்பட்டது