பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருஞான சம்பந்தர் இடியேறுண்டு தலை வேறு உடல் வேருகி அழிக்தான். புத்தர்கள் அஞ்சி ஓடினர். - ஆனல் ஊரில் உள்ள மற்றப் புத்தர்கள் திரண் டெழுந்து சாரிபுத்தன் என்பவனே முன்னிட்டுக்கொண்டு வந்து, "எங்களோடு வாதம் செய்துவிட்டு அப்பால் போங்கள்' என்ருர்கள். அது கேட்ட சம்பந்தர், "அப்படியே செய்வோம்' என்று சிவிகையினின்றும் இறங்கி, அருகில் இருந்த சத்திர மண்டபம் ஒன்றைச் சார்ந்தார். புத்தர்கள் தம் தலைவனகிய சாரிபுத்தைேடு அங்கே வந்து சேர்ந்தார்கள். இரு சாராருக்கும் வாதம் தொடங் கியது. புத்தர்களுடைய சமய உண்மைகளே அவர்கள் கூற, அவற்றைத் தக்கபடி மறுத்து வாதிட்டார் சைவப் பிள்ளையார். புத்தர்கள் தம் ஆற்றல் முழுவதும் காட்டி வாதிட்டும் ஞானசம்பந்தர்முன் கிற்க இயலாமல் தோல்வி யுற்றனர். அப்பால் அவர்கள் சைவ சமயத்தை மேற் கொண்டு சம்பந்தர் தாள் பணிந்தார்கள். இவ்வாறு புத்தர் களே வாதில் வென்ற பெருமான் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கடவூரை அடைந்து காலகாலனைப் பணிந்து இன்புற்ருர். அப்போது, 'திருநாவுக்கரசர் எங்கே இருக்கிருர்?" என்று அடியார்களேச் சம்பந்தப் பெருமான் வினவினர். அவர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருப்பதை உணர்ந்து, அவரைப் பார்த்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் உண்டாகவே, திருப்பூர்துருத்தியை நோக்கி அடியார் கூட்டத்தோடும் புறப்பட்டார். - பூந்துருத்தி முதல் காஞ்சி வரை r திருஞான சம்பர்தப் பெருமான் திருப்பூக்துருத்தியை அணுகிக் கொண்டிருந்தார். அந்தச் செய்தியைக் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/88&oldid=784085" இலிருந்து மீள்விக்கப்பட்டது