பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூந்துருத்தி முதல் காஞ்சி வரை 83 திருகாவுக்கரசர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். மதுரை சென்று சமணர்களே வாதில் வென்று வெற்றியுடன் வரும் அந்த ஞானக் குழந்தையை எதிர்சென்று வரவேற்க வேண்டும் என்ற ஆசை அவரை உங்தியது. பெரிய கூட்டத்துடன் சம்பந்தர் வந்துகொண்டிருக் தார். அப்பர்சுவாமிகள் யாரும் அறியாமல் அந்தக் கூட்டத் தில் புகுந்து சம்பந்தருடைய சிவிகையைத் தாங்குவோ ருடன் ஒருவராகச் சேர்ந்துகொண்டு தாங்கி வந்தார். அப்போது ஞானசம்பந்தருக்குத் திருவுள்ளத்தில் ஏதோ ஒரு குறிப்புத் தோன்ற, "அப்பர் சுவாமிகள் இப்போது எங்கிருக்கிருர்கள்' என்று கேட்டார். திருகாவுக்கரசர் கீழிருந்தபடியே, "அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனகத் தேவரீருடைய திருவடிகளைத் தாங்கிவரும் பேறு பெற்றேன்' என்ருர். . - அதனேக் கேட்ட சம்பந்தர் துணுக்குற்று, பல்லக்கி னின்றும் கீழே குதித்து, "இவ்வாறு செய்யலாமா?' என்று கூறி இறைஞ்சினர். திருநாவுக்கரசர், "திருஞானசம்பந்தப் பெருமானுக்கு வேறு எவ்வாறு அடியேன் திருத்தொண்டு செய்வது?" என்று சொல்லி இறைஞ்சினர். அருகில் இருந்த தொண்டர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மனமுருகி இருவரையும் கிலத்தின்மேல் விழுந்து வணங்கினர்கள். பின்பு இருவரும் திருப்பூந்துருத்தியை அடைந்து திருக்கோயில் புகுந்து இறைவனே வணங்கினர்கள். அப்பால் கோயிலைச் சார்ந்த ஓரிடத்தில் சம்பந்தர் தம் முடன் வந்த திருக்கூட்டத்தோடு தங்கினர். காவுக்கரசர் ஞானசம்பந்தப் பெருமானுடையகலத்தை விசாரிக்க, அப்பெருமான் மதுரையில் சிகழ்ந்தவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னர். அப்பர் அவரை வணங்கி, 'திருத்தொண்டென்னும் பயிர் தழைக்க வேலியாக விளங்கு கிறீர்கள்' என்று பாராட்டித் தொழுதார். ஞானசம்பந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/89&oldid=784087" இலிருந்து மீள்விக்கப்பட்டது