பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் § சத்புத்திர மார்க்கத்தில் கின்று இறைவனே வழிபட்டவர். சிவானங்கலகரியில் வரும் 'திரவிடசிசு’ என்ற தொடர் இப் பெருமானேயே குறிப்பதாகச் சிலர் கொள்வர். அறுபத்து மூன்று காயன்மார்களேயும் துதித்துச் சுங்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் திருஞானசம்பந்தரை, 'வம்பரு வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணு எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்” என்று துதிக்கிருர். பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் புராணம் மிகப் பெரியது. 4887 பாடல் கள் அடங்கிய பெரியபுராணத்தில் 1856 பாடல்கள் கொண்டது ஞானசம்பந்தப் பெருமான் வரலாறு. இதை எண்ணியே, 'பிள்ளே பாதி, புராணம் பாதி" என்ற பழமொழி வழங்கி வருகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய கம்பியாண்டார் கம்பிகள் அவ்வங்தாதியில் இரண்டு பாடல்களால் சம்பந்தரைப் போற்றியதோடு தனியே அவரைப்பற்றி ஆறு பிரபந்தங்களே அருளியிருக்கிருர், ஆளுடையபிள்ளேயார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும் மணிக்கோவை, ஆளுடையபிள்ளேயார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளேயார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளே யார் திருத்தொகை என்பவை அவை. பிற்காலத்தில் அப் பெருமான்மேல் பிள்ளேத்தமிழ் ஒன்றை ஒரு புலவர் பாடி யிருக்கிரு.ர். ஞானசம்பந்தர் முருகப்பெருமானுடைய அவதாரம் என்று சேக்கிழார் சொல்லவில்லை. ஆயினும் அக் கொள்கையுடையவர்கள் அவர் காலத்தில் இருந்தனர் என்றே தெரிய வருகிறது. கம்பியாண்டார் கம்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/9&oldid=784089" இலிருந்து மீள்விக்கப்பட்டது