பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - திருஞான சம்பந்தர் காவுக்கரசரைத் தொழுது மங்கையர்க்க ரசியாரின் மேன்மை யையும் குலச்சிறையாருடைய திருத்தொண்டின் பெருமை யையும் கூறி, "அவர்கள் முயற்சியே எல்லாவற்றிற்கும் காரணமாக கின்றது' என்று உரைத்தருளினர். பின்பு காவுக்கரசர் தாம் தொண்டை நாடு சென்றதை யும் காஞ்சியைப் பணிந்ததையும் சொல்ல, சம்பந்தரும் தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட வேண்டும் என்ற விருப்பம் உடையவரானர். யாவரும் திருநாவுக்கரசருடைய மடத்துக்குச் சென்று அங்கே தங்கி இறைவனே வழிபட்டு இன்புற்றனர். திருநாவுக்கரசருக்கு மதுரை சென்று திருவாலவாய்ப் பெருமானப் பணிய வேண்டும் என்ற விருப்பு எழுந்தது. ஞானசம்பந்தரும் தொண்டை நாடு செல்லும் பெருவிருப் புடன் அப்பர் சுவாமிகளிடம் விடை பெற்றுப் புறப் பட்டார். முதலில் தம்முடைய ஊராகிய சிகாழிப்பதியை அடைந்தார். மதுரையில் பல வகை வாதங்களைச் செய்து வ்ெற்றியுடன் திரும்பும் அவரைக் காணவேண்டும் என்ற பேரார்வத்துடன் அங்ககாத்தார் காத்திருந்தனர். ஆகவே அவர்கள் சம்பந்தப் பிள்ளையாரைப் பலவகையான வாத்தி யங்களுடனும் மங்கலப் பொருள்களுடனும் வந்து எதிர் கொண்டார்கள். - சம்பந்தர் பல்லக்கினின்றும் இறங்கி அவர்களோடு கலந்து திருக்கோயிற்குச் சென்ருர். உள்ளே புகுந்து திருத்தோணியில் வீற்றிருக்கும் உமாபாகர் சங்கிதியை அடைந்து, "உற்றுமை சேர்வது மெய்யினையே’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினர். அப்பால் தம் திருமாளிகையை அடைந்து காலக் தோறும் தோணியப்பரைத் தரிசித்துக்கொண்டு சில நாட்கள் தங்கியிருந்தார். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/90&oldid=784091" இலிருந்து மீள்விக்கப்பட்டது